ஆசிய 22இன் கீழ், இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்: நான்காம் நாள் போட்டியில் இலங்கைக்கு ஏமாற்றம்

Published By: Vishnu

16 May, 2025 | 01:58 AM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் வியாழக்கிழமை (15) நான்காவது நாளாக நடைபெற்ற ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

போட்டியின் மூன்றாம் நாளான புதன்கிழமை (14) நடைபெற்ற 22 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 57 கிலோ கிராம் எடைப்பிரிவில் இலங்கைக்கு முதலாவது வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்த பெருமை வவுனியாவைச் சேர்ந்த லோகநாதன் கஜிந்தினிக்கு சொந்தமானது.

ஆனால், நான்காம் நாளான இன்றைய தினம்  போட்டியிட்ட இலங்கை வீரர் ஒருவரும் வீராங்கனை ஒருவரும் கால் இறுதிகளில் தோல்விகளைத் தழுவினர்.

இளையோர் ஆண்களுக்கான 67 கிலோ கிராம் எடைப் பிரிவு கால் இறுதிப் போட்டியில் தஜிகிஸ்தான் வீரர் சுல்தானோவ் முஹம்மத் சுல்தோனிடம் 0 - 5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலங்கை வீரர் அஸார் சர்மிக் கபூர் மொஹமத் தோல்வி அடைந்தார்.

இளையோர் பெண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் கிர்கிஸ்தான் வீராங்கனை அஸில்பெக் கிஸி அடேலியாவின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஷஷிகலா நாணயக்கார திணறிப்போனதால்  போட்டியை 2ஆம் சுற்றுடன்  மத்தியஸ்தர்  முடிவுக்குக் கொண்டுவந்தார்.

இதனை அடுத்து அஸில்பெக் கிஸி அடேலியா வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

போட்டியின் ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமை (16) இலங்கையைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் கால் இறுதிப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.

அவர்களில் இலங்கையின் நட்சத்திர குத்துச்சண்டை வீரர் பசிந்து மிஹிரன் தனது கால் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டி அரை இறுதிக்கு முன்னேறுவார் என நம்பப்படுகிறது.

ஆண்களுக்கான 51 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிடும் மிஹிரனை கஸக்ஸ்தான் வீரர் ஏர்கெஷோவ் பெக்ஸாத் எதிர்கொள்ளவுள்ளார்.

இளையோர் ஆண்களுக்கான 54 கிலோ கிராம் எடைப் பிரிவில் மலேசியாவின் வாஹிதி மொஹமத் ரிஸாலை இலங்கையின் ஹேரத் கருணாநாயக்க எதிர்த்தாடவுள்ளார்

57 கிலோ கிராம் எடைப் பிரிவில் கஸக்ஸ்தான் வீரர் அனோபயேவ் ஸசுர்பெக்கிடம் இலங்கை வீரர் தேனுவன் பண்டார பலத்த சவாலை எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

60 கிலோ கிராம் எடைப் பிரிவில் தொழில்முறை குத்துச்சண்டை சங்க வீரர் பௌலெட் ஓசியர் மேட்டியோவை தேஷான் ஜயசுந்தர சந்திக்கவுள்ளார்.

63 கிலோ கிராம் எடைப் பிரிவில் சவூதி அரேபியாவின் அல்ஹவ்சவ் என்பவரை இலங்கையின் பாரிஸ் மஹிபால எதிர்த்து குத்துச் சண்டை கோதாவில் இறங்கவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175...

2025-06-19 14:40:39
news-image

மூன்றாம் நாள் பகல் போசன இடைவேளையின்போது...

2025-06-19 12:25:11
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம்...

2025-06-19 05:57:18
news-image

மழையினால் இரண்டரை மணி  நேர தாமதத்தின்...

2025-06-19 05:54:08
news-image

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு லங்கா...

2025-06-18 14:14:33
news-image

பலம் வாய்ந்த நிலையில் பங்களாதேஷ்

2025-06-18 12:26:58
news-image

ஐ லீக் கால்பந்தாட்டத்தின் முதலாம் கட்ட...

2025-06-17 21:50:43
news-image

அணித் தலைவர் ஷன்டோ, முன்னாள் தலைவர்...

2025-06-17 19:32:38
news-image

அணித் தலைவர் சன்டோ, ரஹிம் ஆகியோர்...

2025-06-17 14:57:43
news-image

டெஸ்ட் அறிமுகம் பெற்றனர் லஹிரு உதார,...

2025-06-17 12:22:55
news-image

மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு SLC...

2025-06-17 12:13:14
news-image

அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றைப் போன்று...

2025-06-17 01:25:54