தமிழ் திரையுலகின் ஒப்பற்ற குணசித்திர நடிகர்களான சத்யராஜ் - காளி வெங்கட் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'மெட்ராஸ் மேட்னி' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்
இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள ' மெட்ராஸ் மேட்னி' எனும் திரைப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பால சாரங்கன் இசையமைத்திருக்கிறார். கடந்த சில தசாப்ததிற்கு முந்தைய காலகட்டத்தின் பின்னணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே படத்தின் தலைப்பு வித்தியாசமாக இருப்பதாலும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணி முதன் முறையாக இணைந்திருப்பதாலும் படத்தைப் பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM