ஜூலையில் வெளியாகும் விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்'

15 May, 2025 | 06:59 PM
image

தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா அதிரடி எக்சன் கதாநாயகனாக நடித்திருக்கும் 'கிங்டம்' எனும் திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தெலுங்கு திரையுலக பிரபல இயக்குநரான கௌதம் தின்னனூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ' கிங்டம்'  திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்ய ஸ்ரீ போர்சே , சத்யதேவ் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கிரிஷ் கங்காதரன் - ஜோமோன் டி ஜோன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். உளவியல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் & ஃபோர்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இந்தத் திரைப்படம் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு சூழல் காரணமாக இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் நான்காம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது.

தனித்துவமான உடல் மொழி, வசீகரிக்கும் ஆற்றலுடன் கூடிய தீர்க்கமான பார்வை , பிரத்யேக நடிப்புத் திறன் இவற்றின் கலவையான விஜய் தேவரகொண்டாவிற்கு ஏராளமான ரசிகைகள் உள்ளனர். இவர்களில் எதிர்பார்ப்பிற்கேற்ப விஜய் தேவரகொண்டாவின் கம்பீரமான தோற்றம் இப்படத்தில் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்