ஏப்ரல் மாதத்திற்கான ஐசிசி அதிசிறந்த வீரர் மெஹ்தி ஹசன் மிராஸ், அதிசிறந்த வீராங்கனை கெத்ரின் ப்றைஸ்

15 May, 2025 | 06:59 PM
image

(நெவில் அன்தனி)

ஏப்ரல் மாதத்திற்கான அதிசிறந்த வீரருக்கான ஐசிசி விருதை பங்ளாதேஷின் மெஹ்தி ஹசன் மிராஸ் வென்றெடுத்துள்ளார். அதேவேளை அதிசிறந்த வீராங்கனைக்கான ஐசிசி விருதை ஸ்கொட்லாந்து அணித் தலைவி கெத்ரின் ப்றைஸ் தனதாக்கிக்கொண்டுள்ளார்.

ஸிம்பாப்வேக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தியதன் மூலம் ஆடவருக்கான ஐசிசி மாதாந்த விருது பங்களாதேஷின் சகலதுறை வீரர் மெஹ்தி ஹசன் மிராஸுக்கு வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த ஸிம்பாப்வே வீரர்களான ப்ளெசிங் முஸாரபானி, பென் சியர்ஸ் ஆகிய இருவரை வெற்றிகொண்டு இந்த விருதை மிராஸ் தனதாக்கிக்கொண்டுள்ளார்.

மெஹ்தி ஹசன் மிராஸ் வென்றெடுத்த முதலாவது ஐசிசி மாதாந்த விருது இதுவாகும்.

அத்துடன் முஷ்பிக்குர் ரஹிம், ஷக்கிப் அல் ஹசன் ஆகியோருக்கு அடுத்ததாக இந்த விருதை வென்றெடுத்த மூன்றாவது பங்களாதேஷ் வீரர் மெஹ்தி ஹசன் மிராஸ் ஆவார்.

'ஐசிசி ஆடவருக்கான மாதாந்த விருதை வென்றெடுத்தது நினைத்துப்பார்க்க முடியாத மகத்தான ஒன்றாகும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும்  ஐசிசி விருதுகளே உரிய அங்கீகாரத்தை வழங்குகின்றன. உலகளாவிய வாக்குகளின் அடிப்படையில் இந்த விருதை வென்றெடுத்தது எனக்கு பெரிய விடயமாகும்' என மிராஸ் கூறினார்.

ஸிம்பாப்வேக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 116 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற அவர் 15 விக்கெட்களை  வீழ்த்தி இருந்தார்.

கெத்ரின் ப்றைஸ்

ஐசிசி மகளிருக்கான மாதாந்த விருதை ஸ்கொட்லாந்து அணித் தலைவி கெத்ரின் ப்றைஸ் வென்றெடுத்தார்.

இந்த விருதுக்கு மேற்கிந்தியத் தீவுகளின் ஹேலி மெத்யூஸ், பாகிஸ்தானின் பாத்திமா சானா ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் அவர்கள் இருவரது ஆற்றல்களைவிட கெத்ரின் ப்றைஸ் வெளிப்படுத்திய ஆற்றல்கள் மிகச் சிறந்தவையாக இருந்ததால் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

பாகிஸ்தானில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் ஆட்டம் இழக்காத 131 ஓட்டங்கள் உட்பட மொத்தமாக 293 ஓட்டங்களை கெத்ரின் ப்றைஸ் குவித்திருந்தார்.

அத்துடன் 6 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

சகலதுறைகளிலும் வெளிப்படுத்திய ஆற்றல்களின் அடிப்படையில் மகளிர் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் தொடர் நாயகி விருதையும் கெத்ரின் ப்றைஸ் தனதாக்கிக்கொண்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 ஓட்டங்கள்;...

2025-06-22 11:07:32
news-image

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உணர்ச்சிவசப்பட்டவராக விடைபெற்றார் மெத்யூஸ்...

2025-06-22 04:44:46
news-image

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஜய்ஸ்வால்,...

2025-06-21 01:39:48
news-image

பில்லி ஜீன் கிங் கிண்ண மகளிர்...

2025-06-20 20:44:06
news-image

ஒன்லைனில் இலங்கை - பங்களாதேஷ் மட்டுப்படுத்தப்பட்ட...

2025-06-20 19:59:25
news-image

கமிந்துவின் அரைச் சதத்தை ஷத்மான், ஷன்டோ...

2025-06-20 19:55:59
news-image

இந்தியா - இங்கிலாந்து மோதும் முதல்...

2025-06-20 13:21:50
news-image

நான்காம் பகல் போசன இடைவேளையின்போது இலங்கை...

2025-06-20 12:34:21
news-image

பெத்தும் நிஸ்ஸன்கவின் அபார சதத்தின் உதவியுடன்...

2025-06-19 20:53:21
news-image

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175...

2025-06-19 21:34:57
news-image

மூன்றாம் நாள் பகல் போசன இடைவேளையின்போது...

2025-06-19 12:25:11
news-image

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம்...

2025-06-19 05:57:18