(எம்,ஆர்.எம்.வசீம்)
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெரும்பான்மை இல்லாத சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஆளும் அரசாங்கத்துக்கும் ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நிபந்தனையுடன் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணி கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்,
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிகமான சபைகளுக்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. இந்நிலையில் யார் ஆட்சி செய்தாலும் அவர்களுக்கு ஏனைய கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
அதனால் அவ்வாறன சபைகளை ஆளும் அரசாங்கம் ஆட்சி செய்வதாக இருந்தால், அவர்களுக்கு ஒருபோதும் ஆதரவளிக்கப்போவதில்லை. அதேநேரம் எதிர்க்கட்சியில் ஏதாவது கட்சி ஆட்சி அமைப்பதாக இருந்தால், அவர்களுக்கு நிபந்தனையும் ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம்.
ஏனெனில் அரசாங்கம் வெறுமனே பேசுவது தவிர செயற்பாட்டில் எதனையும் செய்வதை காணமுடியவில்லை. இன்று நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு.
உப்பு பெக்கெட் ஒன்றின் விலை 60 ரூபாவாக உயர்வதற்கு 70 வருடங்கள் சென்றன. ஆனால் 7 மாதங்களில் 60 ரூபாவுக்கு இருந்த உப்பு பெக்கெட் 350 முதல் 400 ரூபா வரை அதிகரித்துள்ளது. இதுதான் இவர்களின் மறுமலர்ச்சி.
உப்புக்கான தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்புக்கும் இருந்த அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர் ஒருவர் தெரிவிக்கிறார்.
சிலவேளை அந்த அமைச்சரின் மனைவிக்கு குழந்தை கிடைக்க இருந்தாலும் அதற்கும் இருந்த அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் என சொல்வார்கள். நல்ல வேளை, அவ்வாறன எந்த செய்யும் இல்லை. இல்லாவிட்டால் அந்த கட்டணத்தையும் கடந்த அரசாங்கத்தில் போடுவார்கள்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கும்போது புதுமையாக இருக்கிறது. 60 ரூபாவுக்கு இருந்த உப்பு பெக்கட் 350 ரூபாவுக்கு அதிகரித்துள்ளதை 70 வருட சாபம் என தெரிவிக்கிறார்கள். அமைச்சர் ஹந்துன்நெத்தி ஆரம்பித்துவைத்த உப்பு தொழிற்சாலைை எங்கே என கேட்கிறேன். முழு நாட்டுக்கு உப்பு வழங்குவதாக தெரிவித்தார்கள். அந்த உப்பு தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதா?.
இன்று ஆசிரியர் நியமனம் கிடைத்த ஒருவருக்கு பாடசாலை ஒன்றின் அதிபர் பதவியை வழங்கியுள்ளதுபோன்றே இருக்கிறது. எதனையும் தூரநோக்குடன் தீர்மானம் எடுக்க முடியாத ஒரு அரசாங்கம். அரசாங்கத்தில் உள்ளவர்கள் உப்பு பெக்கெட்டிலும் பணமோசடி செய்துள்ளனர்.
அரிசி இறக்குமதியிலும் மோசடி செய்துள்ளனர். இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலாே அரிசிக்குக்கு 60 ரூபா வரி அறவிட்டால், இறக்குமதி செய்பவருக்கு எந்தளவு லாபம் மீதமாகிறது. அந்த லாபத்தை இரண்டாக பிரித்து எங்கு அனுப்புகிறார்கள்.
அநுரகுமாரவுக்கா அல்லது வசந்த சமரசிங்கவுக்கா? கொல்கலன் விடுவிப்பு மோசடியில் கிடைக்கப்பெற்ற பணம் எவ்வளவு என யாருக்கும் தெரியாது. அண்மைக்காலத்தில் இடம்பெற்ற பாரிய பண மாேசடி இதுவாகும்.
மற்றவர்களின் குறைகளை தேடிக்கொண்டு கோல் கதைத்துக்கொண்டும் இருக்கும் கிணற்றடியில் கலந்துரையாடும் ஒரு அரசாங்கமாகும். இதனைத் தவிர 7 மாதங்களில் இவர்கள் எதை செய்திருக்கிறார்கள் என கேட்கிறேன்.
அதனால் மக்கள் இவர்கள் மீது பாரிய நம்பிக்கை வைத்தே வாக்களித்தார்கள். வணங்கப்போன விகாரை தலையில் இடிந்து விழுந்தால் ஏற்படுகின்ற கோபம், வேறு ஒரு இடத்தில் இடிந்து விழுவதைவிட அதிகமாகும். அதனால் அந்த சூராவளி எந்தப்பக்கத்தால் வீசும் என மதிப்பிட்டு சொல்வது இலகுவானதல்ல என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM