(எம்.வை.எம்.சியாம்)
டிஜிட்டல் கொடுப்பனவு முறைமை ஊடாக ஊழல் புற்றுநோயை சமூகத்திலிருந்து ஒழிக்க முடியுமென பிரதம நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான முர்து பெர்னாண்டோ தெரிவித்தார்.
அரசாங்கத்தின் டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமான அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமான ''Govpay'' ஐ உயர்நீதிமன்ற கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதம நீதியரசர் இதனை தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் அனைத்து விதமான கொடுப்பனவுகளையும் இந்த மென்பொருளை பயன்படுத்தி மேற்கொள்ள முடியும். இதற்கமைய வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கட்டணங்கள், சான்றளிக்கப்பட்ட நகல் கட்டணங்கள், வணிக மேல்முறையீடு தாக்கல் கட்டணங்கள், நட்டயீடு, முறைப்பாடளித்தல் கட்டணங்கள், மற்றும் சத்தியப்பிரமாணங்களுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட பல கொடுப்பனவுகளை இதன் மூலமாக இலகுவாக செலுத்த முடியும்.
முன்னதாக இந்த மென்பொருள் மூலம் ஆரம்ப கட்டமாக 16 அரச நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் எதிர்வரும் நாட்களில் பல அரச நிறுவனங்களை இணைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதம நீதியரசர்,
இந்த டிஜிட்டல் கொடுப்பனவு தளத்தின் ஊடாக சட்டரீதியான பணக் கொடுக்கல் வாங்கல் முடிவு கொண்டு வரப்படுகிறது.
கடந்த 200 வருடங்களாக நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் நீண்ட வரிசைகள் மற்றும் விண்ணப்ப படிவங்களை நிரப்புதல் உள்ளிட்ட பாரம்பரிய முறைமைகள் இதன் மூலம் நிறைவுக்கு கொண்டு வரப்படுகிறது.
அதேபோன்று சமூகத்தையும் முழு அரச கட்டமைப்பையும் சீர்குலைக்கும் கொடிய புற்றுநோயாக கருதப்படும் ஊழலை இந்த டிஜிட்டல் கொடுப்பனவு தளத்தின் பயன்பாட்டின் ஊடாக இல்லாமல் செய்வதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளதாக நான் நம்புகிறேன். எம்மால் குறுகிய காலப்பகுதிக்குள் ஊழல் இல்லாத சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM