இரசிகர்களின் ஆதரவைக் கோரி ஜூலையில் களமிறங்கும் நடிகர் கவின்

15 May, 2025 | 04:36 PM
image

'பீட்சா' படத்தின் மூலம் திரையுலக பயணத்தை தொடங்கிய நடிகர் கவின் - ' டாடா' என்ற வெற்றி பெற்ற படத்திற்குப் பிறகு இரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகராக உயர்ந்திருக்கிறார். வளர்ந்து வரும் நடிகரான இவர் மீண்டும் இரசிகர்களை ஜூலையில் 'கிஸ்' படத்தின் மூலம் சந்திக்கிறார்.

இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'கிஸ்' எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக 'அயோத்தி' படத்தின் மூலம் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும் , நடிகருமான ராகுல் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என படக் குழு பிரத்யேக புகைப்படத்துடன் உற்சாகமாக அறிவித்துள்ளது.‌

இதனிடையே 'டாடா 'என்ற வெற்றி படத்திற்கு பிறகு நடிகர் கவின் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து, வெளியான 'ஸ்டார்' மற்றும் ' பிளடி பெக்கர் ' ஆகிய இரண்டு திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவோ.. வசூல் ரீதியாகவோ.. எதிர்பார்த்து வெற்றியை பெறவில்லை. இதனால் திரையுலக பயணத்தில் நட்சத்திர அந்தஸ்திற்காக தடுமாறிக் கொண்டிருக்கும் கவினுக்கு, 'கிஸ் ' திரைப்படம் வெற்றியை அளிக்குமா? அளிக்காதா?  என்பது ஜூலையில் தெரிந்துவிடும் என திரையுலகினர் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்