சோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு இராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு இராசியை விட்டு இன்னொரு இராசிக்கு கடந்து செல்வதை சனிப் பெயர்ச்சி என்பர்.
ஏழரை சனி
நம் ஜாதக கட்டத்தில் சந்திரன் நின்ற இராசியை ஜென்ம இராசி என்பர். ஆகவே, ஜென்ம இராசிக்கு முந்தைய இராசி அதாவது 12ஆம் இடத்தில் சனி பெயர்ந்து வரும்போது ஆரம்பித்து இரண்டரை வருடம்.ஜென்ம இராசிக்கு சனி பெயர்ந்து வந்த இரண்டரை வருடம்.
ஜென்ம இராசிக்கு அடுத்த இராசி அல்லது இரண்டாமிடத்தில் சனி பெயர்ச்சியாகி இரண்டரை வருடம்.
ஆக… மூன்று இரண்டரை வருடங்கள், மொத்தம் ஏழரை வருடங்கள் சனி பெயர்ச்சியால் நமக்கு சனி கிரகத்தின் அதிர்வின்படி பலாபலன் ஏற்படும் காரணத்தால் அதற்கு பெயர் “ஏழரைச்சனி” என்பதாகும்.
வகைகள்
ஜென்ம இராசியில் முந்தைய 12 ஆவது இராசியில் இருக்கும் பொழுது அதை - விரய சனி அல்லது தலை சனி என்று பெயர்.
ஜென்ம இராசியில் இருக்கும் பொழுது - ஜென்ம சனி அல்லது மார்பு சனி என்று பெயர். ஜென்ம இராசிக்கு அடுத்த இராசி அல்லது இரண்டாமிடத்தில் இருக்கும் பொழுது - பாத சனி என்று பெயர். ஒருவருடைய வாழ்க்கையில் 30 வருடங்களுக்கு ஒருமுறை ஏழரைச்சனி வரும்.
ஒருவருடைய வாழ்க்கையில் முதல் முறையாக ஏழரைச்சனி வரும் பொழுது அதற்கு மங்கு சனி என்று பெயர். ஒருவருடைய வாழ்க்கையில் இரண்டாவது சுற்றாக ஏழரைச் சனி வரும்போது அதற்கு பொங்கு சனி என்று பெயர். அதுவே, மூன்றாவது சுற்று ஏழரைச்சனி வரும்போது அதற்கு இறுதி சனி என்று பெயர்.
சிலருக்கு பிறக்கும்போதே ஏழரை சனி இருந்தால் அவர்களுக்கு அவர்களது வாழ்க்கையில் நான்கு முறை ஏழரைச்சனி வருவதற்கு வாய்ப்புள்ளது.
பரிகாரம்
பலரும் பயப்படும் கிரகம் என்றால் அது சனி பகவான் என்றால் மிகையில்லை. ஆனால் அதே அளவு பாசக்காரரும் கூட. அவர் ஒரு நீதிமானாக இருப்பவர். தவறு என்றால் அதை எப்படி சரி செய்ய வேண்டுமோ அப்படி அதிரடியாக சரிசெய்யக் கூடியவர். இவரை நீதிமான் என சொல்லலாம். அதனால் நீதியை பின்பற்றுபவர்கள் அவரைக்கண்டு பயப்படத் தேவையில்லை.
நம் பாவம் புண்ணியங்களை எம லோகத்தில் இருக்கும் சித்திர குப்தன் எழுதி வருகின்றார். அவர் சளைப்பாரே தவிர, சனி பகவான் அதை கணக்கில் கொள்வதில் சளைக்கமாட்டார். அதற்கான பலன்களை அவர் அவரின் இராசிக்கு வரும் போது கொடுப்பார்.
சனி பாதிப்பிற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்
சனி பெயர்ச்சியால் மிகவும் பாதிக்கப்பட்டும் இராசியை சேர்ந்த நபர்கள் முதலில் செய்ய வேண்டியது, அவர்கள் செய்த தவறை உணர்ந்து வருந்தி, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்பது நல்லது.
அதோடு சனி பகவானிடம் இனி இது போன்ற பாவ செயலை செய்ய மாட்டேன் என கூறி தனக்கு நல்லருள் புரிவாயாக என வேண்டிக்கொள்ள வேண்டும்.
சனிக்கிழமையன்று சனிபகவானை வணங்கி எள் தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். அதோடு ஏழரை சனி காலத்தில் நியாயமாக நடந்துகொள்பவர்கள் அந்தளவுக்கு அதிகமாக பாதிக்கப்படுவதில்லை.
மேலும், சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது மிக அவசியம். குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் அல்லது எண்ணெய் தேத்து குளிக்க இயலாது என நினைப்பவர்கள், சனிக்கிழமைகளில் குளித்துவிட்டு காலை 6-7 மணி வரை வரும் சனி ஹோரை நேரத்தில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் எடுத்து கிழக்கு திசையில் நின்று அதன் ஒரு பகுதியை எடுத்து தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். மீதி எண்ணெய்யை உடலின் பிறபாகங்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற பரிகாரங்க்ள செய்துவர, ஏழரைசனி துன்பங்களில் இருந்து தீர்வு கிட்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM