நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளில் AI கண்காணிப்புக் கருவிகள் விரைவில் பொருத்தப்படும் - பிமல் ரத்நாயக்க 

15 May, 2025 | 04:38 PM
image

நாட்டில் நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் GPS மற்றும் CCTV கருவிகள் விரைவில் பொருத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

இந்த தொழில்நுட்ப இணைப்புகள் இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளில் இணைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பேருந்து ஓட்டுநர்களை கண்காணிக்கவும் அதனூடாக வீதி விபத்துக்களை குறைக்கவும் இந்த இணைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஓட்டுநர்கள் சோர்வாக இருக்கிறார்களா, தூக்கத்தில் பேருந்தை செலுத்துகிறார்களா, பணியில் ஈடுபடும்போது கைப்பேசி பயன்படுத்துகிறார்களா போன்ற விடயங்களை கண்டறிய இந்த தொழில்நுட்ப அமைப்புகள் உதவும். 

தற்போது ஓட்டுநர்கள் சீரற்ற வீதி நிலைமைகள், பேருந்துகளில் இயந்திரக் கோளாறுகள் மற்றும் போதிய வெளிச்சம் இன்மை போன்ற இடையூறுகளையும் எதிர்கொள்கின்றனர். அவற்றை கண்காணிக்கவும் இந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் பயன்படும் என அமைச்சர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திர கட்சிக்கு அழைப்பில்லை சாமர சம்பத்...

2026-09-12 17:44:08
news-image

நாமல் சிறைசென்றுள்ளமை அரசியல் பழிவாங்கல் அல்ல...

2026-09-12 17:17:36
news-image

செயற்கையான டீசல் தட்டுப்பாட்டை உருவாக்கி எரிபொருள்...

2026-09-12 17:15:27
news-image

சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத...

2026-09-12 18:02:29
news-image

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை சி.டி.ஸ்கேன் நிதி...

2026-09-12 17:44:49
news-image

வவுனியா வெடுக்குநாறிமலையில் பௌத்த பிக்கு தலைமையிலான...

2026-09-12 17:16:55
news-image

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் பேருந்துடன்...

2026-09-12 17:15:07
news-image

மக்களின் பங்களிப்போடு புதிய அரசியலமைப்பு வேண்டும்...

2026-09-12 15:07:30
news-image

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக...

2026-09-12 16:17:37
news-image

கடந்த அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்தைப் போன்றே இவ்...

2026-09-12 16:17:21
news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07