கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரை, ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள புத்த ரஷ்மி வெசாக் வலயத்துடன் இணைந்ததாக நடைபெறும் "வெசாக் பக்திப் பாடல் இசைத்தல்" நிகழ்வு மூன்றாவது நாளாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நேற்று (14) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமானது.
வெசாக் பக்திப் பாடல் இசை நிகழ்வின் மூன்றாவது நாளில் இலங்கை பொலிஸ் இசைக்குழுவின் இசையுடன் பிரபல பாடகர்களான இலியாஸ் பேக், இமான் பெரேரா, புத்திக உஷான் மற்றும் இலங்கை பொலிஸ் பக்திப் பாடல் குழுவினர் பாடல் இசைத்தனர்.
அதே நேரத்தில், ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் கூடு கண்காட்சியும் நடைபெற்றது.
ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த பக்திப் பாடல் நிகழ்ச்சி இன்றோடு (15) நிறைவடைகிறது.
வெசாக் கொண்டாட்டங்களைப் பார்வையிட கொழும்புக்கு வரும் மக்களுக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் சிற்றுண்டி மற்றும் ஐஸ்கிறீம் விநியோகம் என்பன நாளை 16ஆம் திகதி வரை நடைபெறும்.
இதேவேளை, கங்காராம "புத்த ரஷ்மி" வெசாக் வலயம் மற்றும் "பௌத்தாலோக" வெசாக் வலயம் ஆகியவற்றுடன் இணைந்து ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரணையுடன் பல வெசாக் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
ஜனாதிபதி செயலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்கள் மற்றும் வீதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு வெசாக் கூடு கண்காட்சி உட்பட பல நிகழ்ச்சிகள் ஜனாதிபதி அலுவலக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM