சரத்குமார், ராதாரவி மீது குற்றப்பிரிவிடம் புகார்: நடிகர் சங்க செயற்குழு தீர்மானத்தில் முடிவு

நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச்செயலாளர் ராதாரவி மீது பொருளாதார குற்றப்பிரிவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ளதாக நடிகர் சங்க செயற்குழு முடிவு செய்து உள்ளது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 99ஆவது பிறந்தநாளான நேற்று அவரது திரு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு 4ஆவது செயற்குழு கூட்டம் நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தின் போதே மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.