மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த மூன்று மாதங்களுக்கான இடைக்கால நிதியியல் அறிக்கைகள்
நிறுவனப் பதிவு எண்: PQ 48
ஊடக அறிக்கை
பான் ஏசியா வங்கியானது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 180% அதிகரிப்புடன் ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான PAT உடன் தொடர்ந்து சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது.
• நிகர வட்டி வருமானம் - ரூ. 3.04 பில்லியன், 5% ஆல் அதிகரிப்பு
• நிகர கட்டணம் மற்றும்தரகு வருமானம் - ரூ. 0.50 பில்லியன், 25% ஆல் அதிகரிப்பு
• நிதிச் சேவைகள் மீதான வரிகளுக்கு முந்தைய செயற்பாட்டு இலாபம் - ரூ. 1.91 பில்லியன், 73% ஆல் அதிகரிப்பு
• வரிக்கு முந்தைய இலாபம் - ரூ. 1.46 பில்லியன், 84% ஆல் அதிகரிப்பு
• வரிக்கு பிந்தைய இலாபம் - ரூ. 1.02 பில்லியன், 180% ஆல் அதிகரிப்பு
• மொத்த சொத்துக்கள் ரூ. 8.50 பில்லியன், 3% ஆல் அதிகரிப்பு
• மொத்த கடன் புத்தகம் ரூ. 7 பில்லியன், 4% ஆல் அதிகரிப்பு
• வாடிக்கையாளர் வைப்புத் தளம் ரூ. 6.5 பில்லியன், 3% ஆல் அதிகரிப்பு
• CASA விகிதம் 21.36% இலிருந்து 22.21% ஆக மேலும் மேம்பட்டுள்ளது
• செலவுக்கு-வருமான விகிதம் 52.68% இலிருந்து 47% ஆக மேம்பட்டுள்ளது
• நிகர வட்டி வரம்பு - 4.62%, சொத்துக்களின் மீதான வருமானம் (வரிக்கு முந்தைய) - 2.22%, சமப்பங்கு மீதான வருமானம் -15.23%
•பங்கொன்றின் வருமானமானது இரட்டிப்பிற்கும் மேலாக அதிகரித்து ரூ. 0.82 (82 சதம்) இலிருந்து ரூ. 2.30 ஐ எட்டியுள்ளது
• கடன் தர குறிகாட்டிகள் மேலும் மேம்பட்டுள்ளன;
- நிலை 3 கடன்கள் மற்றும் மொத்த கடன்களின் விகிதம் 3.10% இலிருந்து 2.79% ஆக முன்னேற்றம்
- நிலை 3 ஒதுக்கீட்டு பரம்பல் 60.10% இலிருந்து 61.50% ஆக முன்னேற்றம்
• வங்கி நன்கு மூலதனத்தையும் பணப்புழக்கத்தையும் பேணுகிறது;
- பொதுவான சமப்பங்கு அடுக்கு 1 விகிதம் - 17.09% (ஒழுங்குமுறை குறைந்தபட்சம் - 7.00%)
- அடுக்கு 1 மூலதன விகிதம்- 17.09% (ஒழுங்குமுறை குறைந்தபட்சம் - 8.50%)
- மொத்த மூலதன விகிதம் - 18.72% (ஒழுங்குமுறை குறைந்தபட்சம் - 12.50%)
- அந்நியச் செலாவணி விகிதம் - 7.91% (ஒழுங்குமுறை குறைந்தபட்சம் - 3%)
- அனைத்து நாணய LCR - 263.77%, ரூபாய் LCR 210.24% (ஒழுங்குமுறை குறைந்தபட்சம் - 100%)
- நிகர நிலையான நிதி விகிதம் - 148.62% (ஒழுங்குமுறை குறைந்தபட்சம் - 100%)
பல்வேறு சவால்களுக்கு மத்தியில்,படிப்படியாக புத்துயிர் பெற்று வரும் பாரிய பொருளாதார சூழலிற்கு மத்தியில் பான் ஏசியா வங்கி கூட்டுத்தாபனம் பிஎல்சியானது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அற்புதமான நிதியியல் செயல்திறனைப் பதிவு செய்தது. வங்கியானது நிதி அடிப்படையில், மற்றொரு காலாண்டில் வளர்ச்சி மற்றும் இலாபத்தை பதிவு செய்தது. வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) 180% அதிகரித்தது. இந்த வளர்ச்சியானது வலுவானதொகுதி முகாமைத்துவம், பயனுள்ள செலவு முகாமைத்துவம் மற்றும் நிலையான இலாபத்தை ஈட்டுவதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
இதன் விளைவாக, வங்கி 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 1.02 பில்லியனை வரிக்குப் பிந்தைய இலாபமாக பதிவு செய்தது, இதன் விளைவாக பங்கொன்றிற்கான வருவாய் (EPS) இரட்டிப்பாகி ரூ. 2.30 ஐ எட்டியது. வெளிப்புற சவால்களை திறமையாக எதிர்கொள்ளும் திறனால் வங்கியின் வலுவான செயல்திறனை பதிவு செய்யக்கூடியதாக இருந்தது.
மார்ச் 31, 2025 நிலவரப்படி, சொத்து தரத்திற்கான வங்கியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பானது தொழில்துறையில் மிகக் குறைந்த நிலை 3 கடன் விகிதங்களில் ஒன்றான 2.79% ஐப் பராமரிப்பதில் பிரதிபலித்ததுடன் இதுஎமது கடுமையான கடன் இடர் முகாமைத்துவம் மற்றும் காப்புறுதித் தரநிலைகளுக்கு சான்றாகும். அரசாங்கம் விதித்த மீட்புகள் மீதான கட்டுப்பாடுகள் பின்னடைவை ஏற்படுத்தினாலும், வங்கியானது இதனால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க மீட்பு உத்திகளை முன்கூட்டியே செம்மைப்படுத்தியது.
இதற்கிடையில், கடன் பெறுபவர்கள் /துறைகளில் விவேகமான குறைபாடு வழங்கல் நிதி நெருக்கடியை வெளிப்படுத்தியதால், கடந்த ஆண்டு இறுதியில் 60.10% ஆக இருந்த வங்கியின் நிலை 3 ஒதுக்கீடு பரம்பலானது மார்ச் 31, 2025 நிலவரப்படி 61.50% ஆக மேம்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையானது கொள்கை விகிதங்களை இரண்டு முறை குறைக்க எடுத்த கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப.2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து, கடன் மற்றும் வைப்புத்தொகை இரண்டிற்கும் சந்தை வட்டி விகிதங்கள் படிப்படியாகக் குறைந்துள்ளன. இதனால், சராசரி கடன் பிரிவானது அதிகரித்த சூழ்நிலையிலும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப அதன் பிரதிபலிப்பு காரணமாக, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான வங்கியின் வட்டி வருமானம் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 9% ஆல் குறைந்துள்ளது.
மேலும், சராசரி வைப்பு புத்தகத்தில் வலுவான வளர்ச்சி இருந்தபோதிலும், குறைந்த வட்டி விகிதங்கள் நிலவியதால், 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான வட்டி செலவு 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான வட்டி செலவை விட 17%ஆல் குறைந்துள்ளது. இதன் விளைவாக, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிகர வட்டி வருமானம் 5% ஆல் அதிகரித்துள்ளது, ஏனெனில் வட்டி செலவில் ஏற்பட்ட வீழ்ச்சி வட்டி வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை விட அதிகமாக இருந்தது.
நாட்டில் நிலவும் குறைந்த வட்டி விகித நிலை மற்றும் பிற சாதகமான பொருளாதார காரணிகளின் விளைவாக, கடன் தேவை அதிகரித்ததால் கடன்கள் மற்றும் முன்பணங்களிலிருந்து உருவாக்கப்பட்ட கட்டண வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானம் 25% அதிகரித்துள்ளது. அதைத் தவிர, வர்த்தகம் மற்றும் பணம் அனுப்புதல்களிலிருந்து உருவாக்கப்பட்ட கட்டண வருமானமும் மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது.
அறிக்கையிடல் காலத்தில் FVPL இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட அலகு நிதியங்கள் மற்றும் இலங்கை அரசாங்க ரூபாய் பத்திரங்களில் முதலீடுகளிலிருந்து மூலதன ஆதாயங்கள் குறைந்ததன் காரணமாக, வர்த்தகத்திலிருந்து நிகர ஆதாயங்கள் 50%ஆல் குறைந்துள்ளன.
FVPL இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட அலகு நிதியங்கள் மற்றும் இலங்கை அரசாங்க ரூபாய் பத்திரங்களில் முதலீடுகளிலிருந்து MTM ஆதாயங்கள் அதிகரித்ததன் காரணமாக, FVPL இல் நிதி சொத்துக்களிலிருந்து நிகர நியாய பெறுமதி ஆதாயங்கள் 2025 முதல் காலாண்டில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் FVOCI இல் நிதி சொத்துக்களின் மீதான அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டதன் மூலம் வங்கி ரூ. 176 மில்லியன் குறிப்பிடத்தக்க மூலதன இலாபத்தைப் பதிவு செய்தது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வங்கியின் செலவு-வருமான விகிதம் 500 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 47% ஆக அதிகரித்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டிற்கான 52.68% இலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. புதிய கிளை திறப்பு மற்றும் வங்கியால் நடத்தப்பட்ட பிற தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பொதுவான விலை உயர்வு ஆகியவற்றால் செலவு அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும், வங்கியின் பயனுள்ள செலவு முகாமைத்துவ உத்திகள் காரணமாக பிற செயற்பாட்டுச் செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பு 17% ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நிதி சேவைகள் மற்றும் வருமான வரிச் செலவுகள் மீதான வரிகள் முக்கியமாக செயற்பாட்டு இலாபத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகஉயர்வடைந்தன. வரி மேல்முறையீட்டு செயல்முறையின் வெற்றிகரமான முடிவுகளின் அடிப்படையில் முந்தைய கால வருமான வரி விதிகளை மாற்றியமைப்பதன் மூலம் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான வருமான வரிச் செலவில் ஏற்பட்ட அதிகரிப்பு ஓரளவுக்கு தணிக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வங்கி நிகர வட்டி வரம்பு (NIM) 4.62% ஆக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், மதிப்பாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் வங்கி 15.23% சமப்பங்கு மீதான வருமானத்தையும் (ROE) 2.22% சொத்துக்கள் மீதான வரிக்கு முந்தைய வருமானத்தையும் (ROA) பதிவு செய்துள்ளது.
வலுவான வருமான வளர்ச்சி மற்றும் மேம்பட்ட செயல்பாட்டுத் திறன்களால் செயற்படுத்தப்படும் அதன் பங்குதாரர்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டும் வங்கியின் திறனை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது மேம்பட்ட கீழ்நிலை செயல்திறனுக்கு பங்களித்த வங்கியின் பயனுள்ள சொத்து பயன்பாடு மற்றும் விவேகமான இடர் முகாமைத்துவ உத்திகளையும் வெளிப்படுத்துகிறது.
வங்கியின் மொத்த சொத்துக்கள் 3% அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. முக்கியமாக கடன்கள் மற்றும் முன்பணங்கள் மற்றும் FVPL இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட அலகு நிதியங்களில் முதலீடுகள் ஆகியவை காரணமாக இந்த சாதகமான நிலை ஏற்பட்டது. மதிப்பாய்வு செய்யப்பட்ட காலகட்டத்தில் குறிப்பாக SME வங்கி மற்றும் சில்லறை வங்கிப் பிரிவுகளில் அதிகரித்த கடன் தேவை காரணமாக, வங்கியின் கடன்கள் மற்றும் முன்பணப் புத்தகமானது 4% விரிவடைந்துள்ளது.
இதற்கிடையில், வங்கியின் மொத்த வாடிக்கையாளர் வைப்புத் தளமானது ரூ. 6.5 பில்லியன் அல்லது 3% அதிகரித்து ஆரோக்கியமான வளர்ச்சியைப் பதிவு செய்தது. இதற்கிணங்க 2025 முதல் காலாண்டில் இக்காலப்பகுதி முடிவடையும் வரை இது ரூ. 197.8 பில்லியனை எட்டியது. மேலும், நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகள் (CASA) தளத்தில் ரூ. 3 பில்லியனுக்கும் அதிகமான வளர்ச்சி ஏற்பட்டதால், 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் CASA விகிதம் 85 அடிப்படைப் புள்ளிகளால் மேம்பட்டது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், வங்கியானது உறுதியான மூலதனம் மற்றும் பணப்புழக்க நிலையைப் பராமரித்து, ஒரு மாறும் சூழலில் அதன் நிதி வலிமையை வலுப்படுத்தியது. மூலதன இடையகங்கள் குறைந்தபட்ச ஒழுங்குமுறை தேவைகளை விட அதிகமாக இருந்தமை விவேகமான முகாமைத்துவத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.
பொதுவான சமப்பங்கு அடுக்கு 1 மூலதன விகிதம் மற்றும் அடுக்கு 1 மூலதன விகிதம் 17.09% ஆக இருந்தது, இது முறையே 7% மற்றும் 8.50% என்ற ஒழுங்குமுறை குறைந்தபட்சங்களை விட அதிகமாக இருந்தது. மொத்த மூலதன விகிதம் சட்டப்பூர்வ குறைந்தபட்சமான 12.50% க்கு எதிராக 18.72% ஆக இருந்தது, இது மீள்தன்மை மற்றும் வளர்ச்சி திறனை உறுதி செய்தது. இதற்கிடையில், வங்கியின் அந்நியச் செலாவணி விகிதம் ஒழுங்குமுறை குறைந்தபட்சமான 3% ஐ விட அதிகமாக உள்ளது, இது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 7.91% ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கடன் புத்தகத்தில் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் காணப்பட்ட போதிலும், பணப்புழக்க அளவுகள்அனைத்து நாணய பணப்புழக்க பரம்பல் விகிதம் (LCR) 263.77% மற்றும் ரூபாய் LCR 210.24%, இரண்டும் ஒழுங்குமுறை வரம்புகளை வசதியாக தாண்டும் வகையில் வலுவாக இருந்தன.
நிகர நிலையான நிதி விகிதம் (NSFR) 148.62% ஆனது , படிப்படியாக மீண்டு வரும் பொருளாதார நிலைமைகளின் கீழ் நிலையான நிதியை திரட்டுவதில் வங்கியின் திறனை பிரதிபலிக்கிறது. இந்த வலுவான அளவீடுகள் நிதி நிலைத்தன்மை மற்றும் நிலையான விரிவாக்கத்திற்கான வங்கியின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளன.
வங்கியின் நிதியியல் பெறுபேறுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த பான் ஏசியா வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளீன் எதிரிசிங்க, “வெளிப்புற சவால்கள் இருந்தபோதிலும் அடிப்படைகளை வழங்குவதன் மூலம் பான் ஏசியா வங்கி தொடர்ந்து மீளெழுச்சி தன்மையை வெளிப்படுத்தி வருகிறது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான எமது உறுதியான நிதி மற்றும் செயற்பாட்டு முடிவுகள், எமது நிதியியல் இலக்குகளை அடைய நாம் சிறந்த நிலையில் உள்ளோம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
எமது மொத்த சொத்துப் புத்தகத்தில் காணப்பட்ட வளர்ச்சியானது PAT இல் 180% அதிகரிப்புடன் இணைந்து, எமது உத்தியின் செயல்திறனை வெளிப்படுத்துவதுடன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் அதே வேளையில், அதிக வருவாயை ஈட்ட நாம் இதை விரைவுப்படுத்துவோம். தொழில்துறையில் சிறந்த குழுவின் ஆதரவுடன், எமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்து, எதிர் காலத்தில் புதிய மைல்கற்களுக்கு வழி வகுக்கும் போது, புத்தாக்கஎண்ணக்கருத்துகள் பான் ஏசியா வங்கியை முன்னோக்கி நகர்த்தும் என எதிர்பார்க்கலாம்''.
பான் ஏசியா வங்கியானது, ஆண்டுதோறும் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்து, 'உண்மையிலேயே இலங்கை வங்கி' என்று வலுவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது, இது நிதிப் பாதுகாப்பை ஊக்குவித்து, அதன் வாடிக்கையாளர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி, நாட்டின் அபிவிருத்தியை ஆதரிக்கும் ஒரு சிறப்பான பயணத்தைக் குறிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM