அழகைக் கெடுக்கும் மருக்களை நீக்க எளிய வழி

15 May, 2025 | 11:33 AM
image

* தேயிலை மர எண்ணெயில் சில துளிகள் ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து, அவற்றை ஒரு பருத்தி உருண்டையால் மருக்கள் மீது தடவவும். இந்த நடைமுறையை தினமும் இரண்டு முதல் மூன்று முறை செய்யதால் விரைவில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.

* விட்டமின் E ஐ, மருக்களின் மேல் சிறிது வைத்து, ஒரே இரவில் விட்டு விடுங்கள். குறைந்தது 2 வாரங்களுக்கு இதை தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

* மருக்கள் நீங்கும் வரை தினமும் சுமார் இரண்டு வாரங்களுக்கு ஆமணக்கு எண்ணெயை மருக்களின் மீது தடவவும்.

* இரண்டு சொட்டு அப்பிள் சைடர் வினிகரை ஒரு பங்கு தண்ணீருடன் எடுத்துக் கொள்ளவும். கலவையில் ஒரு பருத்தி பந்தை ஊறவைத்து, தொடர்ந்து 15 நிமிடங்கள் தடவவும். தொடர்ந்து 2 வாரங்களுக்கு இப்படி செய்து வர மருக்கள் மறைவதை எளிதில் காணலாம்.

* பூண்டை தோல் உரித்து அதனை சிறிய துண்டுகளாக வெட்டி அதனை மருக்களின் மீது தேய்க்க வேண்டும். அல்லது பூண்டை பேஸ்டாக செய்து மருக்கள் மீது தடவலாம். இப்படி செய்வதன் மூலம் சில நாட்களில் மருக்கள் வேரோடு விழுந்து விடும்.

* எலுமிச்சை சாறை பருத்தித் துணியில் நனைத்து மருக்கள் மீது தடவலாம். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் மருக்கள் விரைவில் உதிர ஆரம்பிக்கும்.

* உருளைக்கிழங்கு சாறை மருக்களின் மீது தேய்ப்பதன் மூலம் மருக்கள் நீங்கும். இரவு முழுவதும் உருளைக்கிழங்கு சாற்றை மருவின் மீது தடவி வைத்திருந்து காலையில் அதனை கழுவலாம்.

* பேக்கிங் சோடாவுடன் ஆமணக்கு எண்ணெயைக் கலந்து பேஸ்ட் போல் செய்து மருக்கள் மீது தடவவும். ஒரு சில நாட்களில் மருக்களில் நீங்கள் வித்தியாசத்தைப் பார்க்க முடியும்.

* அன்னாசிப் பழச் சாற்றினை மருக்கள் மீது தடவி காய விடவும். இப்படி செய்வதன் மூலம் சில நாட்களிலேயே மருக்கள் காணாமல் போகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க...

2025-06-03 18:01:52
news-image

இனி வீட்டிலேயே உதட்டுச்சாயம் செய்யலாம்

2025-05-28 17:35:37
news-image

அழகைக் கெடுக்கும் மருக்களை நீக்க எளிய...

2025-05-15 11:33:07
news-image

டிரெண்டிங் ஹேர்ஸ்டைல்ஸ் - 2025

2025-05-08 17:39:22
news-image

அழகான உதடுகளுக்கு சில டிப்ஸ்…!

2025-05-07 10:07:05
news-image

தோல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வளிக்கும் உளுந்து,...

2025-05-02 14:49:03
news-image

முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க...

2025-04-30 11:27:34
news-image

மாடல் உடைகளுக்கு ஏற்ற மருதாணி டிசைன்கள்

2025-04-24 18:57:00
news-image

மணப்பெண்களே.. இது உங்களுக்குத் தான்…!

2025-04-24 16:15:57
news-image

இனி அழகு நிலையம் தேவையில்லை...ஐஸ்கட்டி போதும்

2025-04-22 17:30:42
news-image

இனி லிப்ஸ்டிக் வேண்டாம் - இயற்கையாவே...

2025-04-22 15:34:22
news-image

யார் யாருக்கு, எந்தவகை சீரம் பொருத்தம்?

2025-04-21 17:04:28