ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுநராக இலங்கையின் முன்னாள் விக்கெட் காப்பாளர் புபுது தசநாயக்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுடன் கூட்டாக ரி - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை கடந்த வருடம் நடத்திய ஐக்கிய அமெரிக்காவின் தலைமைப் பயிற்றுநராக இருந்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஸ்டுவட் லோ விலகிச் சென்றதை அடுத்து புபுது தசநாயக்கவிடம் பயிற்றுநர் பதவி மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது
54 வயதான புபுது தசநாயக்க அமெரிக்க ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் புபுது கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் தலைமைப் பயிற்சியாளராக கடமையாற்றியிருந்தார்.
அமெரிக்க அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அந்தஸ்தை பெற்றுக்கொள்வதற்கும் கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் நாடாக நிலைநிறுத்துவதற்கும் புபுது தசநாயக்க பல்வேறு வழிகளில் உதவினார்.
நேபாளம், கனடா ஆகிய அணிகளின் பயற்றுநராகவும் புபுது தசநாயக்க பதவி வகித்துள்ளார். அவரது பயிற்றுவிப்பிலேயே ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் (2024) போட்டியில் முதல் தடவையாக விளையாட கனடா தகுதிபெற்றது.
இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற ஐக்கிய அமெரிக்கா ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டது..
அமெரிக்க ஆண்கள் கிரிக்கெட் தேசிய அணிக்கு மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டமை குறித்து புபுது தசநாயக்க கூறுகையில்,
"தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை எனக்கு கிடைத்த ஒரு மரியாதை. நான் அமெரிக்க கிரிக்கெட் அணியில் கடமையாற்றிய ஆரம்ப காலத்தில் சாதித்ததைப் பற்றி பெருமைப்படுகிறேன். மேலும் இந்த அணியில் மேலும் பாரிய சாதனைகளை படைப்பதற்கான மகத்தான ஆற்றலைக் காண்கிறேன். அமெரிக்க கிரிக்கெட்டுக்கு அர்த்தமுள்ள ஒன்றைத் தொடர்ந்து உருவாக்க வீரர்கள் மற்றும் ஊழியர்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
புபுது தசநாயக்க, இலங்கைக்காக 11 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் கனடாவுக்குச் சென்று தனது விளையாட்டு வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கனேடிய தேசிய அணியில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM