நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயை கருத்திற்கொண்டு நாளை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட வேண்டாம் என கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் இலங்கை அரச வைத்தியர்கள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலபே சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.