மத்திய மெக்சிகோவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதன்கிழமை காலை பியூப்லா மாநிலத்தில் உள்ள குவாக்னோபாலன் மற்றும் ஓக்ஸாகா இடையேயான அதிவேக வீதியில் மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டதாக உள்ளூர் அரசாங்க அதிகாரி சாமுவேல் அகுய்லர் பாலா தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் லொறி, பஸ், மற்றும் வேன் ஆகியவை சிக்கியுள்ளன.
சீமந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வேனை முந்தி செல்ல முற்பட்டுள்ளது. இதன்போது, பஸ் ஒன்றின் மீது மோதி வேன் மீது நேருக்கு நேர் மோதிய லொறி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, மூன்று பேர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அண்மைய ஆண்டுகளில் மெக்சிகோவில் அதிவேக வீதிகளில் பல கடும் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் தெற்கு மெக்சிகோவின் தபாஸ்கோவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM