NDB வங்கியானது ஐந்தாவது சர்வதேச கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்க கண்காட்சி மற்றும் போட்டியான 'சஹசக் நிமாவும்'ற்கு இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவுடன் (SLIC) கூட்டு சேர்ந்து, உள்நாட்டில் கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்கங்களை விருத்தி செய்வதை மீண்டும் உறுதிப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது.
இதன் மூலம் NDB வங்கியானது படைப்பாற்றல், பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய மற்றும் உள்ளடக்கிய முன்னேற்றத்தின் தேசிய அடையாளமாக விருத்தி அடைந்துள்ள அமைப்புக்கூறு ஒன்றிற்கான உத்தியோகபூர்வ வங்கி பங்குதாரராக தனது ஆதரவைத் தொடர்கிறது.
பல மாதங்களாக நடைபெற்ற பிராந்திய மற்றும் மாகாண போட்டிகளின் சிறப்பம்சமாக 'சஹசக் நிமாவும்' தேசிய கட்ட போட்டியானது 2025 ஏப்ரல் 25 முதல் 27 வரை கொழும்பு BMICHஇல் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், முப்படைகள், தொழில்முறை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சுயாதீன கண்டுபிடிப்பாளர்களும் பங்கேற்றனர்.
சிறப்பு சர்வதேச பிரிவானது ருமேனியா, புருனே மற்றும் ஈரானைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைத்ததன் மூலம் இந்த ஆண்டு பதிப்பை உண்மையிலேயே உலகளாவிய கண்டுபிடிப்புகளுக்கான கொண்டாட்டமாக மாற்றியது.
NDBயானது கண்டுபிடிப்பாளர்களைக் கொண்டாடி மேம்படுத்துவதன் மூலம் போட்டி தொழில்நுட்ப மற்றும் தொழில்முயற்சியாளர்களின் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் தொழில்துறை போன்ற முக்கிய துறைகளுக்கும் பங்களிக்கிறது.
'சஹசக் நிமாவும்' முயற்சியின் தனித்துவமான பலம் அடிமட்ட மக்களை அடைவதாகும். இந்த பங்குடைமை தொடர்பாக NDB வங்கியின் பெருநிறுவன நிலைத்தன்மைக் குழுவின் தலைவர் லசந்த தசநாயக்க கூறுகையில், “‘சஹசக் நிமாவும்’ திட்டத்தில் எமது ஈடுபாடானது இலங்கையின் புதுமை மாற்றும் சக்தியின் மீதான ஆழமான நம்பிக்கையால் உந்தப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பாளர்கள் வெறும் கனவு காண்பவர்கள் மட்டுமல்ல; அவர்கள் தேசத்தைக் கட்டியெழுப்புபவர்கள். நிலைத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை மதிக்கும் ஒரு வங்கியாக, அவர்களுடன் இணைந்திருப்பதில் நாம் பெருமைப்படுகிறோம்” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM