மெக்சிக்கோவில் பிரபல அழகி சுட்டுக்கொலை ; டிக்டொக்  நேரலை ஒளிபரப்பின் போது நடந்த சம்பவம்

Published By: Digital Desk 3

15 May, 2025 | 10:40 AM
image

வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள மெக்சிக்கோ நாட்டில்  ஜலிஸ்கோ மாநிலத்தில் பிரபலமான அழகி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் சிகை அலங்கார நிலையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கும் போது இடம்பெற்றுள்ளது. இதன் போது 23 வயதுடைய பிரபல அழகி சுட்டுக்  கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குவாடலஜாரா பெருநகரப் பகுதியில் சபோபனில் உள்ள சிகை அலங்கார நிலையத்தில் பிரபல அழகி வலேரியா மார்க்வெஸ் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு டிக்டொக்கில் 113,000 ரசிகர்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று டிக்டொக்கில் நேரலை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்துள்ளார். இதன்போது, மோட்டார் சைக்கிளில் இரண்டு ஆண்கள் வந்துள்ளனர்.

அவர்களில் முகமூடி அணிந்த நபர் வலேரியா மார்க்வெஸ் தேடி சிகை அலங்கார நிலையத்திற்குள் நுழைந்துள்ளார்.

அந்நபர்  வலேரியா மார்க்வெஸிடம்  'நீ வலேரியாவா?' எனக் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் ஆம் என பதிலளித்துள்ளார்.

அந்த நபர் துப்பாக்கி ஒன்றை எடுத்து அவளைச்சுட்டுவிட்டு, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.

வலேரியா மார்க்வெஸின் டிக்டொக் புதன்கிழமை முடங்கியது. ஆனால் கொலை செய்யப்பட்ட  காணொளி இணையத்தில் பரவியுள்ளது.

அந்த காணொளியில் கொலை செய்யப்பட்ட  பெண் நாற்காலி ஒன்றில்  அமர்ந்து, மடியில்  இளஞ்சிவப்பு நிற பொம்மையை வைத்திருப்பதும், பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் தன் மார்பையும் வயிற்றையும் பிடித்துக் கொண்டு நாற்காலியில் சரிந்து வீழ்வதும், மற்றொரு பெண்ணின் முகம் காணப்படுவதும்  பதிவாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு புலனாய்வாளர்கள் சென்று பார்த்தபோது, அவள் நாற்காலியில் அமர்ந்திருந்ததோடு,  அந்த சிறிய பன்றி பொம்மை அவளுடைய கைககளில் இருந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்முறை சம்பவமாக இந்த பெண்ணின் கொலையை  விசாரணை செய்து வருவதாக அரச வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மெக்சிக்கோவில் இதுபோன்ற தாக்குதல்கள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை. வலேரியா மார்க்வெஸின் மரணம், நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடந்த நேரடிப் பிரசார நடவடிக்கையின் போது பெண் மேயர் வேட்பாளரான யெசெனியா லாரா குட்டியரெஸ் உட்பட மூன்று சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்க தாக்குதலிற்கு முன்னர்...

2025-06-22 13:59:22
news-image

அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல்...

2025-06-22 11:23:20
news-image

அமெரிக்காவின் தாக்குதல் - நித்திய விளைவுகளை...

2025-06-22 10:45:26
news-image

பிரேசிலில் வெப்பக்காற்று பலூன் தீப்பற்றி விபத்து;...

2025-06-22 09:48:01
news-image

சமாதானத்திற்கு வராவிட்டால் - எதிர்காலத்தில் மேலும்...

2025-06-22 08:23:35
news-image

அமெரிக்கா அணுஉலைகளை தாக்கியுள்ளது - ஈரானின்...

2025-06-22 07:26:59
news-image

ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க...

2025-06-22 07:13:33
news-image

யுத்தத்தின் ஆரம்பம் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

2025-06-22 06:49:17
news-image

ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல்...

2025-06-22 06:28:37
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்

2025-06-22 06:22:12
news-image

ஈரானின் புதிய தாக்குதலில் இஸ்ரேலில் 17...

2025-06-20 20:01:06
news-image

அரச பயங்கரவாதம் - இஸ்ரேலின் தாக்குதல்கள்...

2025-06-20 15:41:49