இறுதிச் சுற்று படத்தின் மூலம் முன்னணி இயக்குநராக முன்னேறியவர் சுதா. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சூர்யாவும், சிவகார்த்திகேயனும் இவரது இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து இயக்குநர் சுதா இருவரிடமும் கதையை சொல்லி சபாஷ் வாங்கினார். இதில் சிவகார்த்திகேயனின் கால்ஷீட் அடுத்த ஆண்டில் தான் கிடைக்கும் நிலை இருந்தது.

இதனால் உஷாரான சுதா, சூர்யாவின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பி, ஒரு கதையை சொல்லியிருக்கிறார். அவரும் கதை பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட உடனே பரபரப்பானார் சுதா. ஆனால் உண்மை நிலை என்னவென்று விசாரிக்கும் போது சிவகார்த்திகேயனுக்கு சொன்ன கதையையே சூர்யாவிடமும் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் சுதா. இதனை சற்று தாமதமாகத் தெரிந்து கொண்ட சூர்யா தரப்பு, அவசரம் அவசரமாக இயக்குநர் சுதாவின் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும், பேச்சு வார்த்தை தான் நடக்கிறது என்றும் தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள்.

சூர்யாவின் பிறந்த நாளில் அவர் நடித்திருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகவிருக்கிறது. அப்போது தான் அடுத்த படத்தின் இயக்குநர் செல்வராகவனா? அல்லது சுதாவா? என்பது தெரியவரும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.