'காலேஜ் ரோடு', 'என் காதலே' ஆகிய போன்ற படங்களின் மூலம், நாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் லிங்கேஷ் முதன்மையான வேடத்தில் தோன்றும் 'காயல்' திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான வெற்றிமாறன் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இயக்குநர் தமயந்தி இயக்கத்தில் உருவாகி வரும் 'காயல்' திரைப்படத்தில் லிங்கேஷ், காயத்ரி, அனு மோல், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் கண்ணையா மற்றும் சுதர்சன் எம்.குமார் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜே.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழக கடற்கரையோர நகரமாக திகழ்ந்து கைவிடப்பட்ட தனுஷ்கோடி பின்னணியில் கதை நடைபெறுவதாக வடிவமைக்கப்பட்டிருப்பதால், படத்தைப் பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM