6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மைக்ரோசொப்ட் தீர்மானம்

Published By: Digital Desk 3

14 May, 2025 | 04:38 PM
image

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது.

இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 3 சதவீதமானவர்களுக்கும் குறைவானதாகும்.

சமீபத்திய ஆண்டுகளில், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிகத்தின் எதிர்காலம் என நம்பப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிக முதலீடு செய்து வருகின்றன. 

அதேவேளை, செலவுகளைக் குறைக்கும் நோக்கில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து மைக்ரோசாப்ட் ஊடகப்  பேச்சாளர், 

மாறிவரும் சந்தையில் வெற்றியைப் பெற நிறுவனத்தை சிறப்பாக நிலைநிறுத்த தேவையான நிறுவன மாற்றங்களை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மைக்ரோசொப்ட்  நிறுவனம், 2022 ஆம் ஆண்டில் ChatGPT அறிமுகப்படுத்தி  தொழில்நுட்பத் துறைக்கே சவால் விடுத்தது. செயற்கை நுண்ணறிவை இரட்டிப்பாக்கிய முதல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஊக்குவிக்கும்...

2026-07-06 14:29:31
news-image

வட்ஸ்அப்பில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'யூசர்நேம்' வசதி...

2026-06-30 10:08:48
news-image

அதிநவீன செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு தற்காலிக...

2026-06-06 14:35:10
news-image

வட்ஸ்அப்புக்கான முக்கிய புதிய அம்சத்தை அறிவித்தது...

2026-05-14 12:00:55
news-image

அண்ட்ரோய்ட் 6 க்கும் குறைந்த பதிப்புகளை...

2026-04-27 14:30:40
news-image

ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய பிரதம நிறைவேற்று...

2026-04-21 09:54:01
news-image

ஷங்காயில் 93 ஆவது சீன சர்வதேச...

2026-04-10 11:03:55
news-image

பாலைவன மணலை பயன்படுத்தி வீதி கட்டுமானமா?...

2026-04-01 16:03:45
news-image

வட்ஸ் அப்பில் அதிரடி மாற்றங்கள்

2026-03-27 12:55:39
news-image

வட்ஸ் அப்பில் புதிய ‘After Reading’...

2026-03-23 13:07:10
news-image

வட்ஸ்அப்பில் புதிய அப்டேட் : இனி...

2026-03-21 12:13:03
news-image

ஊகங்களைத் தாண்டி தரவுகளால் வெற்றியை கட்டியெழுப்பும்...

2026-02-05 12:33:10