எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்

14 May, 2025 | 04:26 PM
image

புதுடெல்லி: எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இன்று (மே.14) ஒப்படைத்தது.

கடந்த ஏப்ரல் 23-ம் தேதி எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பி.கே.ஷா பஞ்சாப் பகுதியில் எல்லையை தாண்டியதாக பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (மே.14) அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

ஷா பஞ்சாப் எல்லையில் ஃபெரோஸ்பூர் பகுதியில் பாதுகாப்பில் இருந்தபோது நிழலுக்காக ஓரிடத்தில் ஒதுங்கியதாகவும், சீருடையில் ரைஃபிலுடன் இருந்த அவர் ஒதுங்கிய பகுதி பாக். எல்லையாக இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் தாக்குதல் நடந்த நிலையில், அடுத்த நாள் ஏப்.23-ம் தேதி பிஎஸ்எஃப் வீரர் கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் இன்று (மே.14) காலை ஒப்படைத்துள்ளது.

இது தொடர்பாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “இன்று காலை 10.30 மணியளவில் அட்டாரி - வாகா எல்லை வாயிலாக, கான்ஸ்டபிள் பூர்ணம் குமார் ஷாவை பாகிஸ்தானிடம் இருந்து மீட்டுள்ளோம். எல்லை பாதுகாப்புப் படையின் தொடர் முயற்சியால் இது சாத்தியமாகியுள்ளது. இதற்காக பிஎஸ்எஃப் ரேஞ்சர்கள், பாகிஸ்தான் ரேஞ்சர்களுடன் பலகட்டமாக பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதன் நீட்சியாகவே வீரரை மீட்க முடிந்தது.” என்று குறிப்பிட்டுள்ளா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல்...

2025-06-22 11:23:20
news-image

அமெரிக்காவின் தாக்குதல் - நித்திய விளைவுகளை...

2025-06-22 10:45:26
news-image

பிரேசிலில் வெப்பக்காற்று பலூன் தீப்பற்றி விபத்து;...

2025-06-22 09:48:01
news-image

சமாதானத்திற்கு வராவிட்டால் - எதிர்காலத்தில் மேலும்...

2025-06-22 08:23:35
news-image

அமெரிக்கா அணுஉலைகளை தாக்கியுள்ளது - ஈரானின்...

2025-06-22 07:26:59
news-image

ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க...

2025-06-22 07:13:33
news-image

யுத்தத்தின் ஆரம்பம் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

2025-06-22 06:49:17
news-image

ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல்...

2025-06-22 06:28:37
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்

2025-06-22 06:22:12
news-image

ஈரானின் புதிய தாக்குதலில் இஸ்ரேலில் 17...

2025-06-20 20:01:06
news-image

அரச பயங்கரவாதம் - இஸ்ரேலின் தாக்குதல்கள்...

2025-06-20 15:41:49
news-image

ஈரானின் ஆன்மீகதலைவரின் சிரேஸ்ட ஆலோசகர் கொல்லப்படவில்லை...

2025-06-20 15:23:30