புதுமுக நடிகர் பிரகாஷ் மோகன் தாஸ் பிரபல நட்சத்திர நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'தி வெர்டிக்ட் ' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் வெளியிட்டார்.
இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள ' தி வெர்டிக்ட்' எனும் திரைப்படத்தில் பிரகாஷ் மோகன்தாஸ், வரலட்சுமி சரத்குமார், சுகாசினி, சுருதி ஹரிஹரன், வித்யூலேகா ராமன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆதித்யா ராவ் இசையமைத்திருக்கிறார். நீதிமன்ற விசாரணை பின்னணியிலான இந்த திரைப்படத்தை அக்னி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் முப்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன் மற்றும் யூகி சேது ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தைப் பற்றி நடிகர் பிரகாஷ் மோகன் தாஸ் பேசுகையில், ''இந்திய பின்னணியிலான எங்களது முதல் படைப்பு இது. நாங்கள் இதற்கு முன் ஹொலிவூட்டில் திரைப்படத்தை தயாரித்திருக்கிறோம். இந்தப் படத்திற்கு கதை தான் நாயகன். அதனை இப்படம் வெளியாகும் போது பட மாளிகையில் கண்டு ரசித்தால். இதற்கான அர்த்தம் புரியும்"என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM