இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும் 'பென்ஸ்'

14 May, 2025 | 04:07 PM
image

நடன இயக்குநரும், சமூக செயற்பாட்டாளருமான ராகவா லோரன்ஸ் முதன்மையான வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் 'பென்ஸ்' திரைப்படத்தில் ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். அதிரடி, திரில்லராக தயாராகும் இந்த திரைப்படத்தை பெஸன் ஸ்டுடியோஸ் -தி ரூட் - ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு கதை எழுதி, வழங்குகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவின் மாநகரங்களிலும் பல்வேறு கட்டங்களாக 120 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

பிரம்மாண்டமான பொருட்செவவில் தயாராகும் இந்த திரைப்படம், இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்