“டூரிஸ்ட் ஃபெமிலி கனவை நனவாக்கியுள்ளது” - சசிகுமார்

14 May, 2025 | 04:07 PM
image

சசிகுமார் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபெமிலி' திரைப்படம், படமாளிகையில் வெளியாகி பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்ற 'டூரிஸ்ட் ஃபெமிலி' படத்தின் வெற்றி விழாவை படக் குழுவினர் சென்னையில் கொண்டாடினர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய, படத்தின் நாயகன் சசிகுமார், '' இந்த திரைப்படம் நிறைய பேரின் கனவை நனவாக்கி இருக்கிறது. நல்ல கதையை வைத்திருப்போருக்கு நம்பிக்கை அளித்துள்ளது. வித்தியாசமான கதைக்களங்களில் நடிக்கலாம்... படத்தை உருவாக்கலாம்.. என்ற நம்பிக்கையை இந்த திரைப்படம் வழங்கி இருக்கிறது.  பொழுதுபோக்கு அம்சத்துடன் தரமான கதையை சொல்லும் திரைப்படங்களுக்கு குடும்ப இரசிகர்கள் தற்போதும் ஆதரவளிக்க தயாராகத்தான் இருக்கிறார்கள் என்பதை இந்தப் படம் நிரூபித்து இருக்கிறது. வெற்றி பெறச் செய்த இரசிகர்களுக்கும் ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

இதனிடையே ‘டூரிஸ்ட் ஃபெமிலி’ திரைப்படம், உலகளவில் இந்திய மதிப்பில் நாற்பது கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்