போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களுக்கான வெற்றியை தெரிந்து கொள்வதற்கு அனுபவம் மிக்க ஆன்மீக முன்னோர்களையும், சோதிட நிபுணர்களையும் சந்தித்து ஆலோசனை கேட்பது வழக்கம்.
அதே தருணத்தில் எம்முடைய ஜாதகம் என்பது வாழ்க்கையில் தடுமாறி, எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்று குழம்பி நிற்கும்போது, எமக்கு உற்ற துணைவனாக திகழும். அதுபோன்ற தருணங்களில் உங்களுடைய ஜாதகத்தை சோதிடரிடம் காண்பித்து பரிகாரமும், ஆலோசனையும் கேட்டால், அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகாட்டலை வழங்குவார்கள்.
அதே தருணத்தில் நீங்கள் எந்த நெருக்கடியையும், அழுத்தத்தையும் எதிர்கொண்டாலும், குறிப்பிட்ட நாட்களில் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடரிடம் சென்று ஆலோசனை கேட்கக் கூடாது. இதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில சூட்சமமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
எப்போதும் ஜாதகத்தை நீங்கள் சோதிடரிடம் காண்பிப்பதற்கு முன் அதனை எடுத்து, உங்கள் வீட்டில் பூஜை அறையில் உள்ள இறைவனின் திருவுருவப்படத்திற்கு முன் வைத்து வணங்கிவிட்டு, நல்ல நாள் சகுனம் ஆகியவற்றை துல்லியமாக அவதானித்த பிறகே ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடரை சந்திக்க வேண்டும்.
இந்நிலையில் கரிநாள் - அஷ்டமி திதி, நவமி திதி, பிரதமை- கிருத்திகை , பரணி, ஆயில்யம், கேட்டை, பூரம் ஆகிய நட்சத்திர தினங்களிலும்... சூரியன் அஸ்தமான பிறகும் ஜாதகத்தை சோதிடர்களிடம் காண்பிக்க கூடாது. காண்பித்து ஆலோசனையும் கேட்கக் கூடாது. இதையும் மீறி அவசரமாக நீங்கள் ஜோதிடரிடம் உங்களது ஜாதகத்தை காண்பித்தாலும்... அந்த தருணத்தில் அவர்கள் சொல்லும் வாக்கு எந்தவித பரிகாரத்தாலும் பலன் அளிக்காது. எனவே மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் திதி - நாள் - நட்சத்திரம் - ஆகியவற்றை துல்லியமாக அவதானித்த பிறகு உங்களது ஜாதகத்தை ஜோதிடர்களிடம் காண்பித்து ஆலோசனை கேட்பதற்காக எடுத்துச் செல்ல வேண்டும்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM