இன்றைய சூழலில் எம்மில் பலரும் நாளாந்தம் துவி சக்கர வாகனத்தில் வாழ்வாதாரத்திற்காக மோசமான சாலைகளிலும் பயணிக்க வேண்டியதாக இருக்கிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், சாலையை பாவிப்பதற்கான முழுமையான விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லாததாலும் எதிர்பாராத தருணங்களில் விபத்து ஏற்படுகிறது.
இந்தத் தருணத்தில் சிலருக்கு விபத்தில் அவர்களுடைய வலது அல்லது இடது கைகளில் உள்ள விரல்களில் பாரிய பாதிப்பு உண்டாகும். இதற்கு தற்போது ஹெமி- ஹமேட் ஓர்த்தோ பிளாஸ்ரி எனும் நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி பலன் அளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
விபத்தின் போது கைகளில் உள்ள விரல்களில் பாதிப்பு ஏற்பட்டு, குறிப்பாக நடு விரலில் பாதிப்பு ஏற்பட்டு அதனை அசைக்க இயலாத நிலை ஏற்பட்டால், அந்த பாதிப்பின் தன்மையை துல்லியமாக பரிசோதனைகள் மூலம் அவதானித்து, அவர்களுக்கு ஹெமி- ஹமேட் ஓர்த்தோ பிளாஸ்ரி எனும் நவீன சத்திர சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
இத்தகைய சத்திர சிகிச்சையின் போது கை விரல்களில் உள்ள இடைநிலை மூட்டுகள் இடம்பெயர்ந்து, விரலை நிலை நிறுத்துவதற்கான அல்லது சமநிலையில் பாவிக்க இயலாத நிலை ஏற்படும். இந்தத் தருணத்தில் ஹெமேட் எனும் மணிக்கட்டு பகுதியில் உள்ள எலும்பின் சிறிய பகுதியை அகற்றி, அதனை விரல்களுக்கு பொருத்தி சிகிச்சை அளிப்பார்கள். இதன் மூலம் உங்களுடைய கைவிரல்கள் இயல்பாக இயங்கத் தொடங்கும்.
மேலும் கை விரல்களின் செயல்பாட்டை முழுமையாக மீட்க இயலும் அத்துடன் வலியை குறைத்து, முழுமையான நிவாரணத்தையும் அளிக்கலாம். சத்திர சிகிச்சைக்குப் பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்றினால், இந்த சத்திர சிகிச்சையின் வெற்றி வீதம் அதிகரிக்கும். சிலருக்கு நாள்பட்ட மூட்டு காயங்களுக்கும் இத்தகைய சிகிச்சை பலன் அளிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வைத்தியர் - ராஜ் கண்ணா
தொகுப்பு: அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM