சீனாவின் க்ளோபல் டைம்ஸ் துருக்கியின் டிஆர்டி வேர்ல்ட் பக்கங்கள் முடக்கம்: இந்தியமத்திய அரசு நடவடிக்கை

14 May, 2025 | 03:24 PM
image

புதுடெல்லி: சீன அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸின் எக்ஸ் கணக்கை இந்திய அரசு முடக்கியுள்ளது. அதேபோல் துருக்கியின் டிஆர்டி வோர்ல்ட்-ன் எக்ஸ் கணக்கும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. தவறான தகவல்களை வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளை சரிபார்த்து ஆதாரங்களை மறுவிசாரணை செய்யுமாறு சீனாவை இந்தியா எச்சரித்திருந்த சில நாட்களுக்கு பின்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (மே 7 ) சீனாவில் உள்ள இந்திய தூதரகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில் “டியர் க்ளோபல் டைம்ஸ் ஊடகத்துக்கு தவறாக வழிநடத்தும் செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளை சரிபார்த்து உங்களின் ஆதாரங்களை குறுக்கு விசாரணை செய்து கொள்ளுங்கள் என்று நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம்.

பல பாகிஸ்தான் ஆதரவு தளங்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய ஆதாரமற்ற தகவல்களை பரப்புகின்றன. ஊடக நிறுவனங்கள் இதுபோன்ற தகவல்களை சரிபார்க்காமல் பகிரும் போது அது ஊடக நிறுவனங்களின் பொறுப்பு மற்றும் ஊடக நெறிமுறைகளில் உள்ள குறைபாட்டினையே பிரதிபலிக்கும்.” என்று தெரிவித்திருந்தது.

முன்னதாக எக்ஸ் நிறுவனம் அதன் க்ளோபல் கவர்ண்மெண்ட் அஃபேர் கணக்கு மூலமாக இந்தியாவின் அறிவுறுத்தலின்படி 8000 எக்ஸ் கணக்குகளை இந்தியாவில் தடுத்து நிறுத்துவதாக மே 8-ம் தேதி தெரிவித்திருந்தது.

இதனிடையே திங்கள்கிழமை ஆசிய விவகாரங்களுக்கான சீனாவின் மூத்த வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி லியு ஜின்சாங் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதல்களுக்கு மத்தியில் சீனாவுக்கான இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத்தைச் சந்தித்து இரு தரப்புகளுக்கு இடையையான பிரச்சினைகள் மற்றும் பொதுவான கவலைகள் குறித்து விவாதித்தார்.

ஆபரேஷன் சிந்தூர்: ஏப்.22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தின் கீழ் துல்லிய தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மே 8இ 9இ 10-ம் தேதிகளில் இந்திய ராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சீன அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸின் எக்ஸ் கணக்கு மற்றும் துருக்கியின் டிஆர்டி வோர்ல்ட்-ன் எக்ஸ் கணக்கும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்க தாக்குதலிற்கு முன்னர்...

2025-06-22 13:59:22
news-image

அமெரிக்காவின் தாக்குதலின் பின்னர் ஈரான் இஸ்ரேல்...

2025-06-22 11:23:20
news-image

அமெரிக்காவின் தாக்குதல் - நித்திய விளைவுகளை...

2025-06-22 10:45:26
news-image

பிரேசிலில் வெப்பக்காற்று பலூன் தீப்பற்றி விபத்து;...

2025-06-22 09:48:01
news-image

சமாதானத்திற்கு வராவிட்டால் - எதிர்காலத்தில் மேலும்...

2025-06-22 08:23:35
news-image

அமெரிக்கா அணுஉலைகளை தாக்கியுள்ளது - ஈரானின்...

2025-06-22 07:26:59
news-image

ஈரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க...

2025-06-22 07:13:33
news-image

யுத்தத்தின் ஆரம்பம் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

2025-06-22 06:49:17
news-image

ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல்...

2025-06-22 06:28:37
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்

2025-06-22 06:22:12
news-image

ஈரானின் புதிய தாக்குதலில் இஸ்ரேலில் 17...

2025-06-20 20:01:06
news-image

அரச பயங்கரவாதம் - இஸ்ரேலின் தாக்குதல்கள்...

2025-06-20 15:41:49