தேர்தலில் வாக்களிக்காததால் முதியோர் கொடுப்பனவு வழங்காப்படாமல் துரத்தப்பட்ட முதியவர் - முல்லைத்தீவில் சம்பவம்  

14 May, 2025 | 02:58 PM
image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் முதியோர் கொடுப்பனவு பெறச் சென்ற முதியவர் ஒருவர் கொடுப்பனவு தர முடியாதென துரத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்துக்கு இன்று புதன்கிழமை (14) காலை  முதியோர் கொடுப்பனவு பெறுவதற்காக முதியவர் ஒருவர் சென்றுள்ளார். 

அவர் தனக்குரிய கொடுப்பனவுக்காக இரண்டு மணித்தியாலங்கள் காத்திருந்த நிலையில், அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் “தாமதிக்காமல் கொடுப்பனவை சீக்கிரம் வழங்கி என்னை அனுப்புங்கள்” என கூறியுள்ளார். 

அதற்கு, அங்கிருந்த முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரும் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளருமான  நபர் ஒருவர் அந்த முதியவரை பார்த்து, தமக்கு வாக்களிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி கடிந்துள்ளார்.

பின்னர், அந்த நபர் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் சென்று, இந்த முதியவருக்கு கொடுப்பனவு வழங்க வேண்டாம் என கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

அதன் பின், அஞ்சல் அலுவலக உத்தியோகத்தரிடம் சென்ற முதியவரை,  தகாத வார்த்தைகளை பிரயோகித்து திட்டியதோடு, முதியவர் வைத்திருந்த கொடுப்பனவு அட்டையினை தூக்கி எறிந்து, கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

250 ரூபா கொடுப்பனவுக்காக 2 கிலோமீற்றர் பயணம் செய்து வந்த முதியவர், தனது வாக்கினை அந்த முன்னாள் அஞ்சல் அலுவலக உத்தியோகத்தருக்கு வழங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி, அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? அல்லது இந்த நிலை இவ்வாறே தொடர வழிவகுக்கப்போகிறதா என அங்கிருந்த மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி...

2026-07-12 17:08:19
news-image

நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து...

2026-07-12 21:48:41