கூகுள் " லோகோ" வில் மாற்றம் செய்தது ஏன் ?

Published By: Digital Desk 3

14 May, 2025 | 02:37 PM
image

கூகுள் சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 'G' லோகோவில் மாற்றங்களைச் செய்துள்ளது.

பழைய லோகோவில் பெட்டிகளாக தென்படும், சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் ஆகிய நான்கு திட நிறங்கள், தற்போது சாய்வான கலவையாகவும் திடத்தன்மை குறைக்கப்பட்டும் புதிய லோகோவில் காணப்படுகின்றன.

கூகுள் தொடர்ந்து புதிய AI அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதால் இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

9to5Google இன் அறிக்கையின்படி, இந்த புதுப்பிப்பு தற்போது iOS மற்றும் பிக்சல் சாதனங்களில் காணப்படுகிறது. இது கூகுள் ஆப் பீட்டா பதிப்பு 16.18 உடன் அண்ட்ரொய்ட் சாதனங்களிலும் தோன்றுகிறது.

இருப்பினும், கூகுளின் முக்கிய சொல் அடையாளத்தில் நிறுவனம் இன்னும் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை.

கூகிள் தனது தயாரிப்புகளில் AI க்கு முன்னுரிமை அளிப்பதால், எதிர்காலத்தில் மேலும் பல மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது. இறுதியாக 2015 ஆம் ஆண்டு கூகுள் தனது 'G' லோகோவில் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.

கூகுள்

கூகுள் என்பது இணையம் தொடர்பான சேவைகள் மற்றும் தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச நிறுவனமாகும்.  

இணையத் தேடுபொறி இதன் முதன்மையான சேவையாகும். 

கூகுள் 1998 ஆம் ஆண்டு லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால்  ஸ்தாபிக்கப்பட்டது.

இது டிஜிட்டல் துறையில் ஆதிமிக்க சக்தியாக திகழ்கிறது. அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உலகளவில் பில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்படுகின்றன.

கூகுள் நிறுவனத்தின் பல சேவைகளும் பின்வருமாறு: 

கூகுள் தேடுபொறி:

தேடுபொறி கூகுள் நிறுவனத்தின் முன்மையான அம்சமாகவுள்ளது. பயனர்கள் இணையத்தில் தகவல், படங்கள், வரைபடங்கள் மற்றும் பலவற்றைக் கண்டறிய அனுமதிக்கிறது.

கூகுள் அல்பாபெட்டின்  துணை நிறுவனம்

2015 ஆம் ஆண்டு  முதல், கூகுள் அல்பாபெட் இன்க் நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ளது.

அல்பாபெட்  கூகுள் தொடர்பான பல்வேறு வணிகங்கள் மற்றும் முயற்சிகளையும் மேற்பார்வையிடும் நிறுவனமாகும்.

இணையவழி விளம்பரம் (Online Advertising)

கூகுள் விளம்பரங்கள் (Google AdWords) நிறுவனத்திற்கு முக்கியமாக வருமானத்தை ஈட்டுக்கிறது. இது தேடல் முடிவுகளுக்கு அருகில் விளம்பரங்களை காட்சிப்படுத்துகிறது.

ஏனைய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் (Other Products and Services)

தேடலுக்கு அப்பால், ஜிமெயில், யூடியூப், கூகுள் வரைப்படம், அண்ட்ரோய்ட் இயங்குதளம், கூகுள் கிளவுட் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கூகுள் வழங்குகிறது.

ஏஐ (AI) மற்றும் இயந்திர கற்றல்

கூகுள் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலில் முன்னணியில் உள்ளது, ஜெமினி AI போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்குகிறது, இது கூகுள் போர்ட் மற்றும் நோட்புக்எல்எம் போன்ற தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

நோக்கம்

"உலகின் தகவல்களை ஒழுங்கமைத்து, அதை உலகளவில் அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதே" கூகுளின் கூறப்பட்ட நோக்கம், இது அறிவுப் பரவல் மற்றும் அணுகல் மீதான அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுப்பாட்டை மீறி இணையத்தை ஊடுருவிய ஓபன்...

2026-07-29 14:59:15
news-image

சமூக வழிகாட்டுதலை மீறியதால் இலங்கையில் 4.4...

2026-07-21 11:55:51
news-image

சீனாவின் ஷென்செனில் உலகின் முதல் வர்த்தக...

2026-07-17 14:01:03
news-image

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஊக்குவிக்கும்...

2026-07-06 14:29:31
news-image

வட்ஸ்அப்பில் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'யூசர்நேம்' வசதி...

2026-06-30 10:08:48
news-image

அதிநவீன செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு தற்காலிக...

2026-06-06 14:35:10
news-image

வட்ஸ்அப்புக்கான முக்கிய புதிய அம்சத்தை அறிவித்தது...

2026-05-14 12:00:55
news-image

அண்ட்ரோய்ட் 6 க்கும் குறைந்த பதிப்புகளை...

2026-04-27 14:30:40
news-image

ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய பிரதம நிறைவேற்று...

2026-04-21 09:54:01
news-image

ஷங்காயில் 93 ஆவது சீன சர்வதேச...

2026-04-10 11:03:55
news-image

பாலைவன மணலை பயன்படுத்தி வீதி கட்டுமானமா?...

2026-04-01 16:03:45
news-image

வட்ஸ் அப்பில் அதிரடி மாற்றங்கள்

2026-03-27 12:55:39