இலங்கை தேயிலைத் தொழிற்துறைக்கு பங்களிப்பு வழங்கிவரும் அனைத்துப் பங்குதாரர்களின் பங்குப்பற்றலுடன் 8ஆவது தேசிய தேயிலை நிகழ்வுகள் நேற்றைய தினம் (13) பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.
சுமார் 150 வருடங்களுக்கும் மேலான வரலாற்று சிறப்பு வாய்ந்த இலங்கைத் தேயிலைத் தொழிற்துறையின் கலாசார நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விழா, சித்திரை மாதம் வரை உற்பத்தி செய்யப்படும்
தேயிலையை முதன் முதலாக இறைவனுக்காக படைக்கப்பட்டு, பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்ற ஒரு தேசிய விழாவாகும்.
இந்நிகழ்வுகளுக்கு இலங்கை தேயிலை சபையின் பிரதி ஆணையாளர் சமரவீர உதவி ஆணையாளர் பட்டுவங்துடாவ மற்றும் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள், தேயிலை உற்பத்தி நில உரிமையாளர்கள், தேயிலைத் தொழிற்துறையைச் சார்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
\
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM