நாடு முழுவதும் நிதி ரீதியான அணுகலை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டின் வெளிப்பாடாக, கார்கில்ஸ் வங்கி குளியாப்பிட்டியில் தனது 26 ஆவது கிளையைத் திறந்துள்ளது.
குளியாப்பிட்டிய கிளை, சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகள், கடன்கள், பணம் அனுப்புதல், கடன் அட்டைகள் மற்றும் டிஜிட்டல் வங்கி சேவைகள் உள்ளிட்ட முழு அளவிலான வங்கிச் சேவைகளை வழங்குகிறது, மேலதிக வசதிக்காக 24/7 நாட்கள் கொண்டு அமைந்த சுய சேவை வசதிகளுடன் சேவைகளை வழங்குகிறது.
நவீன வசதிகள் மற்றும் அர்ப்பணிப்புள்ள, சேவை வழங்குதலை நோக்கமாகக் கொண்ட ஊழியர்களுடன், உள்ளுர் சமூகத்தில் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வரும் ஆண்டுகளில் நம்பகமான நிதியியல் பங்காளியாக மாறுவதற்கும் இந்தக் கிளை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வணிகம்சார் வளர்ச்சிக்கும் நிதியியல் சேவைகள் அதிகரித்த வகையில் முக்கியமானதாகி வருவதால், குளியாப்பிட்டிய பிரதேசம் போன்ற சமூகங்கள் நீண்டகால வெற்றிக்குத் தேவையான வங்கியியல் வளங்களை எளிதாக அணுகுவதை கார்கில்ஸ் வங்கியின் தொடர்ச்சியான கிளை விஸ்தரிப்புகள் உறுதி செய்கின்றன.
இல. 88, ஹெட்டிபொல வீதி, குளியாபிட்டிய என்ற முகவரியில் அமைந்துள்ள புதிய கிளை,; பரந்துபட்ட சமூகத்திற்கு அனைவரையும் உள்ளடக்கிய முறையிலான வங்கியியல் தீர்வுகளை வழங்குவதற்கான வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளை இப்புதிய கிளை வலுப்படுத்துகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM