இறக்குவானை பரி.யோவான் தமிழ் கல்லூரியின் 2025ஆம் ஆண்டுக்கான பழைய மாணவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடைபெற்றது.
இறக்குவானை பொது மைதானத்தில் மூன்று தினங்கள் நடைபெற்ற போட்டியில் 1992ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற பழைய மாணவர்கள் களமிறங்கியிருந்தனர்.
இந்த போட்டிகளில் 1992ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற கல்வி பொது தராதர சாதாண தர மாணவர்கள், லெஜன்ட் அணி பிரிவிலும், அதன் பின்னரான காலத்தில் கல்வி பயின்ற கல்வி பொது தராதர சாதாண தர மாணவர்கள் இளையோர் அணி பிரிவிலும் போட்டிகளை எதிர்நோக்கியிருந்தனர்.
இந்த நிலையில், லெஜன்ட் அணி சார்பில் 2002ஆம் ஆண்டு மாணவர்கள் (ரோயல் கிங்ஸ்) சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன், 1994ஆம் ஆண்டு மாணவர்கள் இரண்டாவது இடத்தை தன்வசப்படுத்தினார்கள்.
அத்துடன், இளையோர் அணி சார்பில் போட்டிகளில் கலந்துகொண்ட 2015ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாண தர மாணவர்கள் சம்பியன் பட்டத்தை வென்றனர்.
2002ஆம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர மாணவர்கள் (ரோயல் கிங்ஸ்), இரண்டாவது முறையாக கிரிக்கெட் போட்டிகளில் சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.
இறக்குவானை பரி.யோவான் தமிழ் கல்லூரி வரலாற்றில் இரண்டு முறை சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்ட ஒரே அணியாக 2002ஆம் ஆண்டு அணி (ரோயல் கிங்ஸ்) திகழ்கின்றமை விசேட அம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM