செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபைக்கு நிறைவேற்றுப் பணிப்பாளராக அனுபவமிக்க சந்தைப்படுத்தல் நிபுணரான சமித ஹேமச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதேவேளை பிரதான செயற்பாட்டு அதிகாரி பதவிக்கு அவர் பதவி உயர்வு பெற்றுள்ளதாகவும் செலிங்கோ லைஃப் அறிவித்துள்ளது.
செலிங்கோ லைஃப் நிறுவனத்தில் 2000ஆம் ஆண்டு வர்த்தக நாம முகாமையாளராக திரு. ஹேமச்சந்திர இணைந்ததுடன் பணிப்பாளராக நியமிக்கப்படும் வரை நிறுவனத்தில் பல சிரேஷ்ட முகாமைத்துவ பதவிகளை வகித்தார்.
ஆயுள் காப்புறுதித் துறையில் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நாம கட்டமைப்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை அவர் சபைக்கு கொண்டு வருகிறார். அவர் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
2004ஆம் ஆண்டில் செலிங்கோ லைஃப் நிறுவனமானது சந்தைத் தலைமைத்துவத்தை அடைந்தபோது சிரேஷ்ட முகாமைத்துவக் குழுவில் அவர் அங்கம் வகித்ததுடன் நிறுவனமானது அந்தத் தலைமைத்துவத்தை இன்று வரை 21 ஆண்டுகளாகத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் (SLIM)) செலிங்கோ லைஃப் நிறுவனமானது மூன்று தடவைகள் இலங்கையின் சிறந்த வர்த்தக நாமமாகவும், ஆறு தடவைகள் சிறந்த சேவை வர்த்தக நாமமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM