அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக செவ்வாய்க்கிழமை (13) மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றப்பின் ட்ரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய கிழக்குக்கு பயணம் இதுவாகும்.
பயணத்தின் முதல் நாடாக ட்ரம்ப் நேற்றைய தினம் சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார். தனி விமானம் மூலம் ரியாத் சென்ற ட்ரம்பை சவுதி இளவரசர் முகமதுபின் சல்மான் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.
அதன்பின் டொனால்ட் டிரம்பும், முகமதுபின் சல்மானும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
வர்த்தகம், இருநாட்டு உறவு, இஸ்ரேல் - ஹமாஸ் போர், ஈரான் விவகாரம், மசகு எண்ணெய் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் 600 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் டொனால்ட் ரம்ப் மற்றும் முகமது பின் சல்மான் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதேபோல், அமெரிக்காவில் இருந்து 142 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ ஆயுதங்களை சவுதி அரேபியா கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த முதலீடு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இருநாட்டுகள் இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM