சிக்குன்குனியாவை கண்டறிவதற்கான ஆய்வக பரிசோதனை முன்னெடுங்கள் ; மருத்துவ ஆய்வக விஞ்ஞான நிபுணர்கள் நிறுவனம் கோரிக்கை

Published By: Vishnu

14 May, 2025 | 01:21 AM
image

(செ.சுபதர்ஷனி)

நாட்டில் வெகுவாக பரவி வரும் சிக்குன்குனியா காய்ச்சல் தொடர்பில் அவதானம் செலுத்துவதுடன், சிக்குன்குனியா நோயை கண்டறிவதற்கான ஆய்வக பரிசோதனை துரிதமாக மீள அறிமுகப்படுத்துமாறு மருத்துவ ஆய்வக விஞ்ஞான நிபுணர்கள் நிறுவனம் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவ ஆய்வக விஞ்ஞான நிபுணர்கள் நிறுவனத்தின் தலைவர் ரவி குமுதேஷ், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வழங்கியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

சிக்குன்குனியா ஒருவகை நுளம்புகளால் பரவும் நோயாகும். நாட்டினுள் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர நோய் காரணியையுடைய நுளம்புகள் உள்ள பகுதிகளை கண்டறிந்து நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்த துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் தொற்றாளர்களை முறையாக அடையாளம்  காண்பதன் மூலம் சிக்குன்குனியா பரவல் அதிகரித்துள்ள பகுதிகளையும் நுளம்புகளையும் அடையாளம் காணலாம்.

எனினும் இதுவரை எவ்வொரு அரச வைத்தியசாலைக்கும் சிக்குன்குன்யா நோயை இனங்காண்பதற்கான பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட வில்லை. நோய் அறிகுறிகளின் அடிப்படையில் மாத்திரமே  சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளினால் நோயால் பாதிப்புக்குள்ளாகியவரை சிக்குன்குனியா நோயாளர் என உறுதிப்படுத்த முடியாமல் உள்ளதுடன், நோய்  காரணியை காவி செல்லும் நுளம்புகளையும் அடையாளம் காண முடியாமல் உள்ளது.

சிக்குன்குனியா நோயை அடையாளம் காண பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துவதற்கு போதியளவான வசதிகள் உள்ள போதும், அப்பரிசோதனைக்கான பிரதியோக கருவிகள் இல்லாமையால் பரிசோதனை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நோயை உரிய நேரத்தில் அடையாளம்  கண்டு சிகிச்சை அளிப்பது அவசியம். இல்லையேல் நோய் நிலைமை காரணமாக சிக்கலான அறிகுறிகள் வெளிப்பட வாய்ப்புள்ளதுடன், நுளம்புகளை அடையாளம் காணப்படாமையால் சமூகத்தில் சிக்குன்குனியா பெருந்தொற்றாக மாறவும் வாய்ப்புள்ளது.

நோய் பரவலின் ஆரம்ப நிலையில் நுளம்புகள் மற்றும் குடம்பிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நோய் பரவலில் இருந்து பாதுகாப்புப் பெறலாம். ஆகையால் நாட்டில் வெகுவாக பரவி வரும் சிக்குன்குனியா காய்ச்சல் தொடர்பில் அவதானம் செலுத்துவதுடன், சிக்குன்குனியா நோயை கண்டறிவதற்கான ஆய்வக பரிசோதனையை துரிதமாக மீள அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கிறேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயர் குருதி அழுத்த பாதிப்பை அலட்சியப்படுத்தலாமா..?

2025-06-19 17:22:27
news-image

விரும்பதகாத சருமத்திற்கான நவீன சிகிச்சை

2025-06-18 17:38:39
news-image

உறக்கம் தொடர்பான கோளாறுக்குரிய நவீன சிகிச்சை

2025-06-17 16:02:55
news-image

ஒவேரியன் டெரடோமா எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-06-16 17:30:08
news-image

ரிலாப்சிங் பொலிகாண்ட்ரிடிஸ் எனும் அரிய பாதிப்பிற்குரிய...

2025-06-14 17:17:51
news-image

ஹைபோநெட்ரீமியா பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-10 19:06:52
news-image

நவீன சத்திர சிகிச்சைகளின் வகைகள் என்ன?

2025-06-09 17:38:05
news-image

லும்பர் ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் எனும் கீழ்ப்பக்க...

2025-06-07 20:35:08
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்புச் சக்தியை...

2025-06-06 18:22:59
news-image

மிட்ரல் வால்வு ஸ்டெனோசிஸ் எனும் இதய...

2025-06-05 17:22:20
news-image

களனி பல்கலைக்கழக ராகம மருத்துவப்பீடத்தில் புதிய...

2025-06-05 13:51:58
news-image

இன்ஹேலரை பாவித்தால் குருதி அழுத்தம் அதிகரிக்குமா?

2025-06-04 18:15:59