(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் திங்கட்கிழமை (12) ஆரம்பமான ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கையின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவுள்ளது.
போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் நடத்தப்பட்ட குலுக்குலுக்கு அமைய இலங்கைக்கு 19 பதக்கங்கள் உறுதியான நிலையில் இன்றைய தினம் மேலும் இரண்டு இலங்கையருக்கு பதக்கம் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இன்று நடைபெற்ற இளையோருக்கான ஆண்கள் பிரிவு கால் இறுதிப் போட்டிகளில் இலங்கை வீரர்களான வித்தான ஆராச்சிலாகே ஜயதிஸ்ஸ, வெலிகெட்டியே சத்சர வர்ணகுலசூரிய ஆகிய இருவரும் வெற்றிபெற்று அரை இறுதிகளுக்கு முன்னேறி பதக்கங்கள் கிடைப்பதை உறுதிசெய்துகொண்டுள்ளனர்.
மேலும் 3 இலங்கையர்களான ஐ. நிலூஷ தத்சர, விதுஷ சன்சித்த ஹெட்டிஆராச்சி, துவான் ஆசில் முராஜுதீன் ஆகியோர் கால் இறுதிகளில் தோல்வி அடைந்து வெளியேறினர்.
ஆண்களுக்கான 48 கிலோ கிராம் எடைப் பிரிவில் கிர்கிஸ்தான் வீரர் அனார்பெக்கோவ் அனார்அலியை 4 - 1 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெலிகெட்டியே சத்சர வர்ணகுலசூரிய வெற்றிகொண்டு அரை இறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.
57 கிலோ கிராம் எடைப் பிரிவில் சவூதி அரேபிய வீரர் அல்ஹய்தாரி மொஹம்மதை எதிர்த்தாடிய வித்தான ஆராச்சிலாகே ஜயதிஸ்ஸ 5 - 0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரை இறுதியில் பங்குபற்று தகுதிபெற்றார்.
இதேவேளை நாளைய தினம் மேலும் ஐந்து இலங்கையர்கள் கோதாவில் இறங்கவுள்ளனர்.
22 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 57 கிலோ கிராம் எடைப் பிரி வு அரை இறுதிப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த லோகநாதன் கஜிந்தினி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளார்.
இந்தியாவின் நான்சி நான்சியை இலங்கை வீராங்கனை லோகநாதன் கஜிந்தினி எதிர்கொள்ளவுள்ளார்.
22 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 67 கிலோ கிராம் எடைப் பிரவில் சவூதி அரேபியாவின் அல்காசிமி இஸ்மாயிலுடன் குத்துச்சண்டை கோதாவில் இலங்கையின் அம்பராப்பொல ஜயதிஸ்ஸ இறங்கவுள்ளார்.
71 கிலோ கிராம் எடைப் பிரிவில் கஸக்ஸ்தான் வீரர் காதிர் அகாகானிடம் கடும் சவாலை இலங்கை வீரர் கந்தே கெதர பண்டார எதிர்கொள்ளவுள்ளார்.
75 கிலோ கிராம் எடைப் பிரிவில் சவூதி அரேபிய வீரர் அல்மௌலாத் நயிபை இலங்கையின் யஸ்மின் மொஹமத் யூசெய்த் எதிர்த்தாடவுள்ளார்.
86 கிலோ கிராம் எடைப் பிரிவில் நியூஸிலாந்து வீரர் வினி ரோமனை இலங்கை வீரர் மல்ஷ் பண்டார எதிர்கொள்ளவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM