தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளியவளையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி ; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

13 May, 2025 | 02:02 PM
image

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முள்ளியவளை மேற்கு வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில், முள்ளியவளைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (13) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முள்ளியவளை மேற்கு வட்டாரக்கிளையின் தலைவர் குமாரையா உதயகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார்.

இந்த அஞ்சலி நிகழ்வு மற்றும், கஞ்சி வழங்கும் செயற்பாட்டில் முள்ளியவளை மேற்கு வட்டாரத்தில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டிய இரத்தினம் ஜெகதீசன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாலைதீவு ஜனாதிபதியின் வருகை, கடற்றொழில் துறையின்...

2026-04-11 11:24:10
news-image

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து:...

2026-04-11 12:50:26
news-image

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கான தேசிய...

2026-04-11 11:41:44
news-image

உர விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால்...

2026-04-11 10:21:57
news-image

சர்வதேச எரிசக்தி மற்றும் காலநிலை மாநாட்டில்...

2026-04-11 11:40:27
news-image

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கை:...

2026-04-11 11:38:59
news-image

22 பில்லியன் நிலக்கரி மோசடி :...

2026-04-11 11:45:29
news-image

முல்லைத்தீவில் புதிய மணல் விநியோக முறை:...

2026-04-11 10:03:17
news-image

பாதுகாப்பான குடிநீரை வழங்க இலங்கை கடற்படையின்...

2026-04-11 09:27:18
news-image

வெறும் 50,300 பேருக்கு மாத்திரமே அஸ்வெசும...

2026-04-11 11:12:25
news-image

விலையேற்றத்தால் முடங்கும் பாடசாலை மதிய உணவு...

2026-04-11 10:16:50
news-image

தரமற்ற நிலக்கரி கொள்வனவு விவகாரம் தொடர்பில்...

2026-04-11 10:57:45