யாழ். கொக்குவில் தென்னாடு சிவ மடத்தில் ஒருசேர நான்கு நிகழ்வுகள்!  

13 May, 2025 | 12:34 PM
image

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கில் அமைந்துள்ள தென்னாடு செந்தமிழ் ஆகம சிவ மடத்தில் நேற்று திங்கட்கிழமை (12) பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நான்கு நிகழ்வுகள் ஒருசேர நடைபெற்றன.

பரிபூரணமடைந்த நல்லை ஆதீன முதல்வரை நினைந்து பிரார்த்தித்தல், வட மாகாண பிரதம செயலாளராக கடமையாற்றி அண்மையில் ஓய்வுபெற்ற இ.இளங்கோவனுக்கான கௌரவிப்பு, சிறந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளைப் பெற்று யாழ். மாவட்ட மட்டத்தில் முன்னிலை வகிக்கும்  மாணவர்களை கௌரவித்தல், “தென்னாடு” சஞ்சிகையின் 57ஆவது இதழ் வெளியீடு ஆகிய நான்கு நிகழ்வுகளும் இதன்போது நடத்தப்பட்டன. 

இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற வட மாகாண பிரதம செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர்  சந்திரமெளலீசன் லலீசன், யாழ்ப்பாணம் சிற்றி காட்வெயார் தொழிலதிபர்  சோமசுந்தரம் பிரகதீஸ்வரன், யாழ். போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா  உட்பட  பலர் கலந்துகொண்டனர். 

அவ்வேளை, சந்திரமெளலீசன் லலீசன் இலட்சுமணன் இளங்கோவனுக்கு “தென்னாடு” இதழின் முதல் பிரதியை வழங்கிவைத்தார். 

அதனையடுத்து, மணிவிழா கண்ட  இ.இளங்கோவனுக்கான மதிப்புரை, ஆதீன முதல்வர் பற்றிய பிரார்த்தனை உரை, மாணவர்களுக்கான பாராட்டுரை என்பவற்றை லலீசன் ஆற்றினார். 

தொடர்ந்து, உயர்தரப் பரீட்சையில் யாழ். மாவட்ட மட்டத்தில் முதல் இடங்களைப் பெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர். 

உயிரியல் பிரிவில் முதல் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன்  யமுனானந்தா  பிரணவன், இரண்டாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன்  யமுனானந்தா சரவணன், வணிகப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன்  விஜயசுந்தரம் வருணன், கலைப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்ற வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மணிவண்ணன் மயூரா ஆகியோரே கௌரவிக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான...

2025-06-21 14:49:02
news-image

ஸ்வேஷ்மா தஷிந்தனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-06-20 13:16:26
news-image

11 ஆவது சர்வதேச யோகா தினம்

2025-06-20 12:45:38
news-image

ஆசியாவின் ”யானைகளின் சந்திப்பு” ஹபரணையில்....

2025-06-20 14:02:09
news-image

இலங்கை மனவளக்கலை மன்றத்தின் சர்வதேச யோகா...

2025-06-17 20:09:45
news-image

மன்னார் மருதமடு திருப்பதியில் ஆடி மாத...

2025-06-19 11:19:37
news-image

சர்வதேச இசை தினத்தை முன்னிட்டு பிரான்ஸ்...

2025-06-17 15:03:55
news-image

தேசிய மட்ட சங்கீதப் போட்டியில் புனித...

2025-06-17 15:20:03
news-image

கொழும்பு பங்குச் சந்தையில் மணி ஒலிக்கச்...

2025-06-16 19:31:42
news-image

இலவச இசைக்கருவி பயிற்சி

2025-06-16 14:03:14
news-image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற...

2025-06-15 20:04:52
news-image

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது...

2025-06-15 20:08:29