SLT-MOBITEL முன்னெடுத்திருந்த ‘Roam and Win’விசேட ஊக்குவிப்புத் திட்டத்தின் அதிர்ஷ்டசாலி வெற்றியாளருக்கு சகல செலவுகளுடனான தாய்லாந்து சுற்றுப் பயணத்தை பரிசாக வழங்கியிருந்தது.
SLT-MOBITEL தலைமையகத்தில் இந்த மாபெரும் பரிசு வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவை கௌரவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தமது சர்வதேச பிரயாணங்களின் போது SLT-MOBITEL ரோமிங் திட்டங்களை செயற்படுத்தும் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தகைமை பெற்ற வாடிக்கையாளர்களிலிருந்து அதிர்ஷ்டசாலி தெரிவு, குலுக்கல் முறையில் மேற்கொள்ளப்பட்டு, மாபெரும் பரிசான, தாய்லாந்துக்கான சகல செலவுகளையும் ஈடு செய்யும் இருவருக்கான வெளிநாட்டு சுற்றுப் பயண வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
பயணம் செய்கையில் ஒப்பற்ற இணைப்பு வசதிகளை அனுபவிக்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் SLT-MOBITEL இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
சர்வதேச மட்டத்தில் இணைப்பில் இருப்பதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு, SLT-MOBITEL இன் ரோமிங் திட்டங்கள் சிக்கனமானவையாகவும், வெகுமதிகளை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
படம்: இடமிருந்து – Mobitel (Pvt) Ltd. ஐ பிரதிநிதித்துவப்படுத்தி, பிரயாணம் மற்றும் நிர்வாகம் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி, ஜெசிகா வல்பொல, வசதிகள் முகாமைத்துவம் –பிரதி பொது முகாமையாளர் ரமேஷ் சஞ்ஜய, சந்தைப்படுத்தல் – பொது முகாமையாளர், சரக பெரேரா, லக்மால் ஜயசிங்க – பிரதம வணிக அதிகாரி, நிறுவனசார் வியாபாரங்கள், SLT-MOBITEL, Mobitel (Pvt) Ltd. பிரதம செயற்பாட்டு அதிகாரி சுதர்ஷன கீகனகே, ஊக்குவிப்புத் திட்டத்தின் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் யு.டி.யு. நவரட்ன, சர்வதேச வியாபாரங்களின் உதவி முகாமையாளர் ரன்மினி டி சில்வா மற்றும் சர்வதேச வியாபாரங்கள் நிறைவேற்று அதிகாரி சதினி தில்ஷானி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM