கொமர்ஷல் வங்கி தனித்தன்மை பொருந்திய 'வெளிநாட்டு வங்கிக் கிளையை' 'பெருநிறுவன கிளையாக' மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
இது வங்கியானது பெருநிறுவன மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு அர்ப்பணிப்புள்ள, விரிவான நிதியியல் தீர்வுகளை வழங்குவதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இல 21, கொமர்ஷல் ஹவுஸ், கொழும்பு 1, சேர் ரசீக் ஃபரீத் மாவத்தை (பிரிஸ்டல் வீதி) அமைந்துள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இந்த மீளநாமமிடப்பட்ட பெருநிறுவனக் கிளையானது, இலங்கையில் முதன்முதலாக நிறுவன வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட ஒரு முதன்மையான நிதி நிலையமாகத் திகழ்வதாக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த மூலோபாய முயற்சி குறித்து கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க, தெரிவிக்கையில்,
'எங்கள் தலைமை அலுவலகம் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க டெல்ஃப்ட் நுழைவாயில், டச்சு கோட்டைக்கு வழிவகுத்தது போல, எமது வங்கிக் கிளையும் இலங்கையின் கடற்கரைகளுக்கு அப்பால் நீடித்த மற்றும் வளமான வர்த்தக ஒத்துழைப்புகளின் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்,' என்று கூறினார்.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதலாவது இலங்கை வங்கியாகும். மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது.
கொமர்ஷல் வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் முன்னணியில் உள்ளது.
அத்துடன் இலங்கையின் முதலாவது 100% கார்பன் நடுநிலை வங்கியாகும். பங்களாதேஷில் 20 நிலையங்கள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான Tier I வங்கி ஆகியவற்றை கொண்டு திகழ்கிறது.வங்கியின் முழு உரித்தான துணை நிறுவனமாக CBC ஃபினான்ஸ் லிமிடெட் திகழ்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM