மட்டக்களப்பில் இனப்படுகொலை நினைவேந்தல் : பொதுமக்களை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரி எச்சரிக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து வெளியேறினார் 

Published By: Vishnu

13 May, 2025 | 07:33 AM
image

மட்டக்களப்பில் இன அழிப்பு வாரம் நிகழ்வு 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அங்கு சிவிலுடையில் வந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம், வீடியோ எடுத்ததற்காக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறினார்.

தமிழ் இன அழிப்பு வாரம் திங்கட்கிழமை (12) மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் பெருமளவான மக்கள் கடத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் தமிழ் இன அழிப்பு வாரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன்போது அங்கு சிவில் உடையில் வந்த கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் என்று தெரிவிக்கப்படும் ஒருவர் நிகழ்வினையும் நிகழ்வில் வந்தவர்களையும் புகைப்படம் எடுத்ததுடன் அங்கு நடைபெறும் நிகழ்வுகளையும் வந்தவர்களையும் வீடியோ செய்யும் நடவடிக்கையிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார்.

இது தொடர்பில் அவதானித்த சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் பொலிஸ் உத்தியோகத்தரை நோக்கி நாங்கள் அமைதியான முறையில் நாங்கள் எங்கள் உறவுகளை நினைவுகூரும் நிகழ்வினை நடாத்திக்கொண்டிருக்கும்போது இங்குவந்து ஏன் இவ்வாறான பதிவுசெய்யும் நடவடிக்கைகளை எடுத்து மக்களை அச்சுறுத்துகின்றீர்கள் என்று கேள்விகளை எழுப்பியதுடன் அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத்தும் உங்களுக்கு இவ்வாறான செயற்பாடுகளை யார் செய்யச்சொல்லி அனுப்பியிருந்தார்கள் என்ற வகையான கேள்விகளை கேட்டபோது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து சென்றார்.

அரசாங்கம் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடைகளை விதிக்காத போதிலும் இவ்வாறான பொலிஸார் நிகழ்வுகளை குழப்பும் வகையில் செயற்படுவதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-06-19 16:42:26
news-image

கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும்...

2025-06-19 17:13:05
news-image

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின்...

2025-06-19 17:10:25
news-image

தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர்...

2025-06-19 17:03:13
news-image

புத்தளம் - குருணாகல் வீதியில் விபத்து...

2025-06-19 16:22:11
news-image

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்...

2025-06-19 16:54:44
news-image

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ;...

2025-06-19 16:45:56
news-image

கெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில்...

2025-06-19 16:46:18
news-image

அமெரிக்க வீசா விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

2025-06-19 17:32:57
news-image

எப்பாமுல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய...

2025-06-19 15:48:22
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-06-19 16:13:46
news-image

மத்திய கிழக்கில் மோதல் சூழ்நிலையால் நமது...

2025-06-19 16:23:28