பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்த இராணுவ வீரர் உயிரிழப்பு!

Published By: Vishnu

13 May, 2025 | 02:12 AM
image

பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ சிவில் விவசாய உத்தியோகத்தர் ஒருவர் 12ஆம் திகதி திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். கண்டி - முறுத்தலை பகுதியைச் சேர்ந்த விதுர சஞ்சீவ மதுரட்ட (வயது 51) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த உத்தியோகத்தர் கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறு பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திங்கட்கிழமை (12) காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆகையால் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (12) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22
news-image

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6...

2026-07-16 21:19:42
news-image

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-07-16 19:09:32
news-image

தமிழ், முஸ்லிம் அரசியல் கூட்டணி நாட்டின்...

2026-07-16 15:44:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைகள் : சீர்திருத்தங்களை...

2026-07-16 21:12:54