(நெவில் அன்தனி)
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று திங்கட்கிழமை (12) ஆரம்பமான ASBC ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு குறைந்தது 19 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இந்த சம்பியன்ஷிப்புக்காக நடத்தப்பட்ட பகிரங்க குலுக்கல் இலங்கைக்கு அதிர்ஷ்டத்தைத் தேடிக்கொடுப்பதாக அமைந்துள்ளது.
அந்த வகையில் வட பகுதியிலிருந்து வவுனியாவைச் சேர்ந்த லோகநாதன் கஜேந்தினி, உதயகுமார் கீர்த்தனா ஆகிய இருவர் பதக்கங்கள் வென்று வரலாறு படைக்கவுள்ளனர். அவர்கள் இருவரும் முடியப்பு நிக்சன் ரூபராஜ் பயிற்சி அளித்து வருகிறார்.
இதேவேளை இரட்டைச் சகோதரிகள் உட்பட 3 சகோதரிகள் இப் போட்டியில் பங்குபற்றுவதன் மூலம் இலங்கை குத்துச்சண்டை வரலாற்றில் சாதனை படைக்கவுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இலங்கை சார்பாக சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றுவது இதுவே முதல் தடவையாகும்.
பெர்னாண்டோ இரட்டைச் சகோதரிகளான சச்சினி, யஷினி ஆகியோருடன் அவர்களது இளைய சகோதரி ஹிருணியும் இப் போட்டியில் பங்குபற்றுகின்றார். அவர்களில் இரட்டைச் சகோதரிகளுக்கு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
பதக்கங்கள் வெல்லக்கூடிய இலங்கையர்கள்
முதியான்சலாகே நரசிங்க (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 75 கி.கி.), ஹன்சனி நாயக்கரத்ன (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 63 கி.கி.), தருஷிகா நாகந்தலகே நெத்மி (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 81 கி.கி.) ஆகிய மூவரும் நேரடியாக இறுதிப் போட்டியில் பங்குபற்றவுள்ளனர். இதன் காரணமாக இந்த மூவருக்கும் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இதேவேளை, எஸ். தசுன்ப்ரிய (22 வயதுக்குட்பட்ட ஆண்கள் 48 கி.கி.), நெத்மி பெரேரா (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 48 கி.கி.), சச்சினி பெர்னாண்டோ (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 50 கி.கி.), யஷினி பெர்னாண்டோ (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 52 கி.கி.), என். சந்தீப்பனி (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 54 கி.கி.), வவுனியாவைச் சேர்ந்த லோகநாதன் கஜேந்தினி (22 வயதுக்குட்பட்ட 57 கி.கி.) மற்றொரு வவுனியா வீராங்கனை உதயகுமார் கீர்த்தனா (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 60 கி.கி.), பவனி முத்துகல (இளையோர் பெண்கள் 48 கி.கி.), எச். விஜேசிங்க (இளையோர் பெண்கள் 63 கி.கி.), தெவ்மி சஞ்சனா (22 வயதுக்குட்பட்ட பெண்கள் 66 கி.கி.) ஆகியோர் நேரடியாக அரை இறுதிகளில் விளையாடவுள்ளனர். எனவே இந்த 13 பேருக்கும் ஏதாவது ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
இவர்களை விட 17 மற்றும் 18 வயதுடைய இளையோருக்கான பெண்கள் பிரிவில் பங்குபற்றும் சப்ரினா ரஹிம் (52 கி.கி.), ஹிருணி பெர்னாண்டோ ((54 கி.கி.), புன்சரா தித்தகல (57 கி.கி.) ஆகியோரும் அரை இறுதிகளில் பங்குபற்றவிருப்பதால் அவர்களுக்கும் பதக்கங்கள் கிடைக்கவுள்ளன.
அரை இறுதிப் போட்டிகளும் இறுதிப் போட்டிகளும் மே 20ஆம் திகதிக்குப் பின்னர் நடைபெறும்.
அதற்கு முன்னர் சகல பிரிவுகளுக்குமான கால் இறுதிப் போட்டிகள் நடத்தப்படும்.
இது இவ்வாறிருக்க, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கால் இறுதிப் போட்டிகளில் பங்குபற்றவுள்ள ஐந்து இலங்கையர்கள் அப் போட்டிகளில் வெற்றி பெற்று அரை இறுதிகளுக்கு முன்னேறினால் அவர்களுக்கும் பதக்கங்கள் கிடைக்கும்.
ஜி. வர்ணகுலசூரிய (48 கி.கி.), நிலூஷ டி தத்சர (51 கி.கி.), வி.எஸ். ஹெட்டிஆராச்சி (51 கி.கி.), ஏ. ஜயதிஸ்ஸ (57 கி.கி.), துவான் ஆசில் முராஜுதீன் (60 கி.கி.) ஆகிய ஐந்து இலங்கையர்கள் குத்துச்சண்டை கோதாவில் செவ்வாய்க்கிழமை (13) குதிக்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM