தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குஷ் என்ற போதைப்பொருளின் ஒரு தொகுதியை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சிறப்பு சோதனையின் போது, 12ஆம் திகதி திங்கட்கிழமை மதியம் நாட்டிற்கு வந்த பிறகு சுங்க வளாகத்தின் வழியாக செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டபோது, அவரது பொருட்களுக்குள் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 46 கிலோகிராம் என்றும், அதன் மதிப்பு 460 மில்லியன் ரூபாய்க்கு அருகில் இருக்கும் என்றும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபரையும் போதைப்பொருள் பொதியையும் மேலதிக விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM