கொத்மலை, ரம்பொட, கெரண்டிஎல்ல பகுதிகளில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை கொத்மலை வைத்தியசாலையிலிருந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நாவலப்பிட்டி மருத்துவமனை மருத்துவர் ஜனக சோமரத்ன தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான பேருந்து தற்போது கொத்மலை பொலிஸ் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர், கதிர்காமம் டிப்போவின் விசாரணை அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் 12ஆம் திகதி திங்கட்கிழமை பேருந்து தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக வந்துள்ளனர்.
கொத்மலை பொலிஸ் பரிசோதகர் வஜிர தேவப்பிரிய, பேருந்தை ஆய்வு செய்து, பின்னர் வழங்கப்படும் அறிக்கைகளை எதிர்கால பணிகளுக்குப் பயன்படுத்துவோம் என்றும், அதுவரை, இந்த விபத்து தொடர்பான உண்மைகளை வரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM