கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் தீர்க்கமான பேச்சுவார்த்தைகளில் பிரதான அரசியல் கட்சிகள்

12 May, 2025 | 05:47 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகளில் தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் சில இவ்வாரம் இடம்பெறவுள்ளன. ஆளுங்கட்சியைப் போன்றே எதிர்க்கட்சிகள் பலவும் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த வாரம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியிலிருந்து 48 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். எனினும், ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகளிலிருந்து 69 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இவ்வாறான நிலைமையில் தனி கட்சியாக தேசிய மக்கள் சக்தியிலிருந்து அதிக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவது யார் என்ற சர்ச்சைக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமக்கு அதிகளவான ஆசனங்கள் கிடைத்துள்ளதால் தாமே கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவதாக ஆளுங்கட்சி தெரிவித்து வருகிறது. எவ்வாறிருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் எதிர்க்கட்சிகள், கூட்டணியமைத்து பெரும்பான்மையை உறுதிப்படுத்தி கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் சுயேட்சை குழுக்களுடன் இது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையிலேயே இவ்வாரமும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரலகங்வில பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேகநபர்...

2025-06-22 14:40:07
news-image

ஈரானின் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் இஸ்ரேலில்...

2025-06-22 14:39:29
news-image

யாழில் பல்வேறு குற்றச்செயல்களை புரிந்த மூவர்...

2025-06-22 14:07:15
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஒடுக்குமுறைப்போக்கை தெள்ளத்தெளிவாகக் காண்பிக்கிறது ருஷ்டியின்...

2025-06-22 13:10:38
news-image

குறைந்த செலவிலான தரமான வலுசக்தி உற்பத்திக்கு...

2025-06-22 13:08:11
news-image

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித...

2025-06-22 13:02:04
news-image

கட்டுநாயக்கவில் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது!

2025-06-22 13:06:03
news-image

பல்துறைசார் வாய்ப்புக்கள் குறித்து ஆராய முன்வாருங்கள்...

2025-06-22 13:03:51
news-image

செம்மணி மனிதபுதைகுழி பகுதிக்கு செல்வதற்கு ஐநா...

2025-06-22 12:36:49
news-image

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ்...

2025-06-22 12:38:09
news-image

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை...

2025-06-22 11:58:41
news-image

ஈரானில் 37 இலங்கையர்கள் உள்ளனர் ;...

2025-06-22 12:02:33