அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

12 May, 2025 | 06:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் 21 நாட்களுக்குள் தேர்தல் பிரச்சார செலவுகள் தொடர்பான விபரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உறுதிப்படுத்தப்பட்ட வகையில் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் அதிகார சபைகளின் நான்கு ஆண்டுகால பதவிக்காலம்  2025.06.02ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும். ஆகவே கொழும்பு மாநகர உட்பட ஏனைய மாநகர சபைகளில் ஆட்சியமைப்பதில் தோற்றம் பெற்றுள்ள சிக்கல்களுக்கு உடன் தீர்வு காண வேண்டியது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

339 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு  2025.05.06ஆம் திகதியன்று நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி 265 அதிகார சபைகளையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி  35 அதிகார சபைகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 14 அதிகார சபைகளையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6 அதிகார சபைகளையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முறையே 3 அதிகார சபைகளையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2 அதிகார சபைகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி 1 அதிகார சபையையும்  பெற்றுக்கொண்டன. 4 சுயேட்சைக் குழுக்கள் தலா 1 அதிகார சபைகளை கைப்பற்றிக்கொண்டன.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் கடந்த புதன்கிழமை (7) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டன. 2023ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் முடிவடைந்து 21 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான செலவு விபரத்திரட்டை உறுதிப்படுத்தப்பட்ட வகையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 75,589 பேர் போட்டியிட்டனர்.

பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு பிரசுரித்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம்  2025.06.02ஆம் திகதி முதல் ஆரம்பமாகும். 

அதற்கமைய உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் முதல் கூட்டம் ஜூன் 2ஆம் திகதி கூட வேண்டும். கொழும்பு மாநகர சபை உட்பட ஒருசில மாநகர சபைகளில் தோற்றம் பெற்றுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பது அரசியல் கட்சிகளின் பொறுப்பாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகலில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-06-19 16:42:26
news-image

கெஹலியவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும்...

2025-06-19 17:13:05
news-image

ஈரானில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு இந்தியாவின்...

2025-06-19 17:10:25
news-image

தெற்காசியாவில் சிறந்த ஊட்டச்சத்துக்காக உணவு, நீர்...

2025-06-19 17:03:13
news-image

புத்தளம் - குருணாகல் வீதியில் விபத்து...

2025-06-19 16:22:11
news-image

முல்லைத்தீவில் கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் மாயம்...

2025-06-19 16:54:44
news-image

யாழில் போதைப்பொருளுடன் கணவர் கைது ;...

2025-06-19 16:45:56
news-image

கெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில்...

2025-06-19 16:46:18
news-image

அமெரிக்க வீசா விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்

2025-06-19 17:32:57
news-image

எப்பாமுல்ல கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய...

2025-06-19 15:48:22
news-image

காலி - கொழும்பு பிரதான வீதியில்...

2025-06-19 16:13:46
news-image

மத்திய கிழக்கில் மோதல் சூழ்நிலையால் நமது...

2025-06-19 16:23:28