எம்மில் பலரும் நாளாந்தம் காலையில் கண்விழித்ததும் ' முருகா ' என்றோ: அரோகரா ' என்றோதான் உச்சரித்து அல்லது மனதில் தியானித்து காரியங்களை தொடங்குவோம். இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக அருளும் முருகப் பெருமானின் ஆசியை,அருளமுதத்தை முழுமையாக பெற வேண்டும் என்றால் முருகன் பெருமான் உங்களின் கோரிக்கையை நேரடியாக கேட்டு, ஏற்க வேண்டும் என்றால் பிரத்யேகமான முருகன் வழிபாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி திதி அன்று சஷ்டி விரதத்தை முழுமையாக கடைப்பிடித்து முருகப் பெருமானின் பாதத்தில் சரணடைந்தால் அவருடைய அருள் பார்வை முழுவதுமாக கிடைக்கும். முருகப்பெருமான் திருமண தடையை அகற்றுவதிலும், விருப்பத்திற்குரிய வரனுடனான திருமணத்தை சாத்தியப்படுத்துவதிலும் தன்னிகரற்றவர்.
திருமண தடை அல்லது திருமண பாக்கியம் குறித்து யாரேனும் மனதில் சிறிய அளவில் கவலைகள் இருந்தாலும் கூட அவர்கள் அதனை வளர்பிறை சஷ்டி என்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து தொழுதால் போதும். ஓராண்டிற்குள் உள்ள பனிரெண்டு வளர்பிறை சஷ்டிகளில் விரதம் இருந்தால் உங்களுடைய கோரிக்கை முருகப்பெருமானின் அருளால் நிறைவடைவதை அனுபவத்தில் காணலாம்.
ஏனைய விரதங்களை நீங்கள் கடைப்பிடித்து முருகப் பெருமானை வணங்கினாலும் வளர்பிறை சஷ்டி திதியன்று சஷ்டி விரதம் இருந்து முருகப் பெருமானிடம் ஒரு கோரிக்கையை சமர்ப்பித்தால் அவை விரைவாகவும், நிறைவாகவும் நடந்தேறும் என்பது உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களின் அசைக்க இயலாத நம்பிக்கை.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM