எமது ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது 40 சபைகளில் நாம் ஆட்சியமைப்போம் ; லசந்த அழகிவண்ண

12 May, 2025 | 04:16 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அப்பால், ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் நாம் ஆட்சியமைப்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். அந்த வகையில் 40 உள்ளுராட்சிமன்றங்களில் எம்மால் ஆட்சியமைக்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகிவண்ண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சிமன்றங்களில் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் சபைகளை நிறுவுதல், கூட்டணியமைத்தல் குறித்து அரசியல் குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

கட்சியின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கமையவே உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். வேட்புமனு தாக்கலின் போது இடம்பெற்ற தவறுகளை நிவர்த்தி செய்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஏனைய கட்சிகள் சபைகளை அமைப்பதற்கு எமது ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும். அத்தோடு சில உள்ளுராட்சிமன்றங்களில் ஏனையோரின் ஒத்துழைப்புடன் எமக்கு ஆட்சியமைக்கக் கூடிய நிலைமை கூட காணப்படுகிறது.

இது தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். சில தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்ளுராட்சிமன்றங்களின் ஊடாக மக்களுக்கு வழங்கப்படக் கூடிய சேவைகள் தொடர்பிலேயே விசேட அவதானம் செலுத்தியிருக்கின்றோம். 

சுமார் 100 உள்ளுராட்சிமன்றங்களில் எமது ஆதரவின்றி எவராலும் சபைகளை நிறுவ முடியாது. எவ்வாறிருப்பினும் நாம் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.

உள்ளுராட்சிமன்றங்கள் தொடர்பில் ஆளுந்தரப்பினர் சில பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுகின்றனர். தமக்கு வாக்களிக்காவிட்டால் நிதி ஒதுக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அச்சுறுத்தினார். 

அவரைப் பின்பற்றியே ஏனையோரும் இது போன்ற கருத்துக்களை வெளியிடுகின்றனர். எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன் எம்மால் 40 சபைகளில் ஆட்சியமைக்க முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ஒடுக்குமுறைப்போக்கை தெள்ளத்தெளிவாகக் காண்பிக்கிறது ருஷ்டியின்...

2025-06-22 13:10:38
news-image

குறைந்த செலவிலான தரமான வலுசக்தி உற்பத்திக்கு...

2025-06-22 13:08:11
news-image

நாளை இலங்கை வருகிறார் ஐ.நா மனித...

2025-06-22 13:02:04
news-image

கட்டுநாயக்கவில் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது!

2025-06-22 13:06:03
news-image

பல்துறைசார் வாய்ப்புக்கள் குறித்து ஆராய முன்வாருங்கள்...

2025-06-22 13:03:51
news-image

செம்மணி மனிதபுதைகுழி பகுதிக்கு செல்வதற்கு ஐநா...

2025-06-22 12:36:49
news-image

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ்...

2025-06-22 12:38:09
news-image

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களை...

2025-06-22 11:58:41
news-image

ஈரானில் 37 இலங்கையர்கள் உள்ளனர் ;...

2025-06-22 12:02:33
news-image

உரகஸ்மன்ஹந்தியவில் கைக்குண்டு, போதைப்பொருளுடன் சந்தேக நபர்...

2025-06-22 12:03:12
news-image

மலையக மக்கள் சிறுபான்மையினமா? தேசிய இனமா?...

2025-06-22 11:22:24
news-image

கொஹுவல துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய...

2025-06-22 10:56:34